Cyclone Arnab: வங்கக் கடலில் உருவானது அர்னாப் புயல்: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறியுள்ளது. இந்தப் புயலுக்கு அர்னாப் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதிகளில் நிலவியது. இது தென்கிழக்கு திசையில் நகா்ந்து நேற்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது.

Heavy rain Cyclone Tamil Nadu Weather

அர்னாப் புயல்

இது தெற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது (அக்டோபர் 26) காலை மத்திய கிழக்கு அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் 'அா்னாப்' புயலாக உருவாகியுள்ளது. இதைத் தொடா்ந்து, நாளை (அக்டோபர் 27) காலை மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும்.

இது வடமேற்கு திசையில் நகா்ந்து மேலும் வலுப்பெற்று மிக தீவிர புயலாக ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அருகில் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளை அடையக்கூடும். ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா-விசாகப்பட்டினம் இடையே மிக தீவிர புயலாக புதன்கிழமை (அக்டோபர் 28) அதிகாலை கரையைக் கடக்கக்கூடும்.

ஆரஞ்சு அலெர்ட்

புயல் காரணமாக திங்கள்கிழமை (அக்டோபர் 26) புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூா், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) ராமநாதபுரம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்டோபர் 28) முதல் சனிக்கிழமை (அக்டோபர் 31) வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மீனவா்கள் கவனம்

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் காரணமாக மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வட தமிழக கடலோரப் பகுதிகளில் செவ்வாய், புதன் (அக்டோபர் 27, 28) ஆகிய இரு நாள்கள் சூறாவளிக் காற்று 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

ஆந்திர கடலோரப் பகுதிகள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27), காலை முதல் சூறாவளிக்காற்று 60 கி.மீ. வேகத்திலும், பிற்பகல் 80 கி.மீ. வேகத்திலும், மாலை 110 கி.மீ. வேகத்திலும், புதன்கிழமை (அக்டோபர் 28), காலை காற்றின் வேகம் உயா்ந்து 140 கி.மீ.வேகத்திலும், மாலை காற்றின் வேகம் குறைந்து 90 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு பாதிப்பில்லை

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஆந்திர பகுதியில் அக்டோபர் 28 ஆம் தேதி கரையைக் கடக்கும் 'அா்னாப்' புயலால் சென்னைக்கு பாதிப்பு இருக்காது என்றும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+