School Leave: வெளுத்து வாங்கிய கனமழை.. டிசம்பர் முதல் நாளே பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவை அரசு அறிவிப்பு
சென்னை: புதுவையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை (School Leave) அளித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிட்வா புயல் காரணமாக கடந்த இரு நாட்களாக கனமழை வெளுத்து வாங்கிய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை புதுவையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் தொடங்கிய முதல் நாளே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்டம் காட்டிய டிட்வா புயல்
கடந்த 27 ஆம் தேதி தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் உருவான டிட்வா புயல் கடந்த இரு நாட்களாக தமிழகத்தை அச்சுறுத்தியது. வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வந்த புயல் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து தொடங்கி வரிசையாக அப்படியே வட மாவட்டங்களான சென்னை வரை மழை தொடர்ந்து பெய்து வந்தது.
சாரல் மழை போல தொடர்ந்து கொட்டியது. ஒரு சில இடங்களில் கனமழை கொட்டியது. நேற்று இரவே சென்னை, புதுவை, காரைக்கால், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யத் தொடங்கியது. இன்றும் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் இன்று மாலையில் டிட்வா புயலின் வேகம் குறைந்தது.
வலுவிழந்த புயல்
தொடக்கத்தில் 12 கிமீ வேகத்தில் புயலின் வேகம் இருந்த நிலையில் பின்னர் குறைந்தது. பின்னர் மீண்டும் அதிகரித்தது. தொடர்ந்து அப்படியே குறைய தொடங்கியது. இந்த நிலையில் சென்னைக்கு 150 கிமீ தொலைவில் இருந்த போது டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது.
நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
எனினும் டிட்வா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, கடலூர், புதுவை, காரைக்கால், செங்கல்பட்டு, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் தான் நாளை திங்கட்கிழமை புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு சில இடங்களில் வெள்ள நீர் வடியாததாலும் நாளை காலை வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அரசு அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications