நேற்று இரவு முதல் புரட்டி எடுத்த மழை.. சென்னையில் அதிக மழை இந்த ஏரியாதான்.. லிஸ்ட்டை பாருங்க!
சென்னை: சென்னையில் நேற்று இரவு முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. ஃபெங்கல் (Fengal) புயல் காரணமாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிகபட்சமாக, கத்திவாக்கத்தில் 121.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயலால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் சென்னையில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகிளில் பெய்யத் தொடங்கிய மழை விட்டு விட்டு வெளுத்தது. அதிகாலையிலும் மழை பெய்தது.

சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்னும் மழை ஓயவில்லை. சென்னை சென்ட்ரல், கிண்டி, அண்ணா சாலை, ஆலந்தூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. தொடர் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. சென்னை உள்பட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதன் காரணமாக வாகன போக்குவரத்தும் குறைந்துள்ளது. சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாமல் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களில் மக்கள் செல்கின்றனர்.
சென்னையில் இன்று (நவம்பர் 30) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் அதிகபட்சமாக, கத்திவாக்கத்தில் 121.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
* கத்திவாக்கம் 121.2
* பேசின் பிரிட்ஜ் 94.2
* திருவொற்றியூர் 93.6
* தண்டையார்பேட்டை 88.2
* பொன்னேரி 83
* மணலி 78.6
* ஐஸ் ஹவுஸ் 78
* சென்னை சென்ட்ரல் 77.4
* மணலி புது டவுன் 73.8
* ஆலந்தூர் 72.3
* அடையார் 72.3
* கொளத்தூர் 72
* மாதவரம் 70.5
* நுங்கம்பாக்கம் 66.6
* சோழிங்கநல்லூர் 66.4
* புழல் 66.3
* வடபழனி 65.4
* மடிப்பாக்கம் 62.1
* ஆவடி 61
* மீனம்பாக்கம் 60.2
* கோடம்பாக்கம் 59.8
* ராயபுரம் 58.4
* திரு.வி.க நகர் 57.2
* அமிஞ்சிக்கரை 56.7
* அண்ணாநகர் மேற்கு 56.7
* பெருங்குடி 55.4
* வளசரவாக்கம் 53.7
* கும்மிடிப்பூண்டி 52
* அயப்பாக்கம் 51.9
* ரெட் ஹில்ஸ் 50.6
* அம்பத்தூர் 49
* அண்ணா நகர் 46.4











Click it and Unblock the Notifications