ஸ்பாட் இதுதான்.. புதுச்சேரி அருகே நாளை மதியம் கடக்கிறது ஃபெங்கல் புயல்.. கன மழை பெய்யும்
சென்னை: புதுச்சேரியிலிருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள ஃபெங்கல் புயல், நாளை மதியம் புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாகி உள்ளது. இந்த புயல் நாளை புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.
இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று மாலை 6 மணிக்கு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் புயலின் நகர்வு, எங்கு மையம் கொண்டுள்ளது.இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் ஏற்படும் தாக்கம் பற்றி விளக்கினார். இதுதொடர்பாக பாலச்சந்திரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. ஃபெங்சல் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் புதுச்சேரிக்கு தென்கிழக்கே 270 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் நாளை 30ம் தேதி காரைக்கால் - மாமல்லபுரத்துக்கு இடையே புதுச்சேரிக்கு அருகே பிற்பகல் புயலாக கரையை கடக்க கூடும்.
இதன் காரணமாக அடுத்து வரும் 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும். அடுத்த 24 மணிநேரத்தில டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம்ஙகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
நாளை 30ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிக கனழையும், திருவண்ணாமலை, வேலூர், அரியலூர், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், திருப்பதூர், தர்மபுரி, நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
