வானிலை மையம் சிறப்பாக செயல்படுகிறது.. புயலால் பெரிய பாதிப்பு இல்லை.. அமைச்சர் விளக்கம்
சென்னை: சென்னையில் ஃபெஞ்சல் புயல் சீரமைப்பு பணிகள் துரிதமாகவும், கவனமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், சென்னையில் தேங்கியுள்ள மழை நீரை இன்று இரவுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறினார். மேலும் சென்னை வானிலை மையம் சிறப்பாக செயல்பட்டதாவும் அமைச்சர் கூறினார்.
ஃபெஞ்சல் புயல் கரையை இன்று மாலை 5.30 மணியளவில் கரையை கடக்க ஆரம்பித்தது. சென்னை மக்களை மிரட்டிய இந்த புயல் தற்போது மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்து வருகிறது. இதனால் புதுவை அருகே பலத்த சூறைக்காற்று வீசுகிறது. இரவு 10.30 மணியளவில் புயலின் வால் பகுதி கரையை கடக்க ஆரம்பித்துவிட்டதாக சென்னை வானிலை மையம் கூறியது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் பல்வெறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் இரவு பேட்டியளித்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் சிறப்பாக செயல்படுகிறது என்றும், சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் இன்று இரவுக்குள் மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். அமைச்சர் கூறியதாவது:-
சீரமைப்பு பணிகள் துரிதமாகவும், கவனமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு அனைத்து நடவடிக்கைகளியும் செய்து வருகிறது. சூழலுக்கு ஏற்றபடி, தகுந்த நடவடிக்கைகளை மாநகராட்சி செய்து வருகிறது. ஒரு இடத்தில் போஸ்ட் கம்பம் சாய்ந்து இருக்கிறது. அது தெரிந்த உடன் அந்த போஸ்ட் கம்பம் உடனடியாக மாற்றப்பட்டு தான் வருகிறது. சென்னையில் புயல், மழை காரணமாக தேங்கியுள்ள மழை நீரை இன்று இரவுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையம் சரியாக செயல்படுகிறது. இயற்கையை மீறி யாரும் எதுவுமே முடியாது. எல்லாமே கணிப்பு தான். அவர்களது கடமையை சரியாக செய்தனர். புயல் கரையை கடக்க ஆரம்பித்ததும் எங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அடுத்த 3 மணி நேரத்தில் புயல் கரையை கடந்து விடும் என்று கூறினார்கள்.
முந்தைய புயல்களை போல் இந்த புயலால் பெரிய அளவு பாதிப்பு இல்லை. மழையின் தாக்கம் குறையும் வரை சென்னையில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு வழங்கப்படும்" என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். மணிக்கு தற்போது 10 கிமீ வேகத்தில் கரையை கடந்து வருகிறது. இன்னும் 2 மணி நேரத்தில் முழுமையாக கடந்து முடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்து வரும் நிலையில் பல்வெறு இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.












Click it and Unblock the Notifications