Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு இந்த நிலையா? புயல்-வெள்ள பாதிப்பால் டேவிட் வார்னர் கவலை.. ‛‛உதவி செய்யுங்க’’ என உருக்கம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வெள்ளப்பாதிப்பு குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கவலையடைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என உருக்கமாக வலியுறுத்தி உள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் விடாமல் பெய்த கனமழையால் மொத்த நகரமே நேற்று முடங்கியது.

Cyclone Michaung: Australian cricketer David Warner concerned about Chennai Flood and request to help who needed

தற்போது புயல் ஆந்திராவில் கரையை கடந்துள்ளதால் இன்று காலை முதல் சென்னையில் மழை என்பது இல்லை. இருப்பினும் கூட கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

குடியிருப்புகளை சூழ்ந்த நீர் இன்னும் வெளியேறவில்லை. இதனால் மழை நின்றாலும் கூட பொதுமக்கள் தொடர்ந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி மீட்பு பணி, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சென்னை மழை வெள்ள பாதிப்பு தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கவலையை பகிர்ந்துள்ளார். அதோடு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி டேவிட் வார்னர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:

சென்னையின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதை அறிந்து நான் கவலையடைந்துள்ளேன். இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவரையும் இந்த சமயத்தில் நினைத்து பார்க்கிறேன். எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்டவர்களுடன் உள்ளது. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருப்பது முக்கியம். தேவை என்றால் மேடான பகுதிகளை நோக்கி செல்ல வேண்டும்.

மேலும் நீங்கள் உதவி செய்யும் நிலையில் இருந்தால் தயவுசெய்து நிவாரணங்கள் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உதவி தேவைப்படுவோருக்கு உதவி செய்ய வேண்டும். இந்த சமயத்தில் நம்மால் இயன்றவரை உதவிகள் செய் ஒன்றுபடுவோம்'' என தெரிவித்துள்ளார். சென்னை மழை வெள்ள பாதிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்களில் தமிழக வீரர் அஸ்வின் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார்.

Cyclone Michaung: Australian cricketer David Warner concerned about Chennai Flood and request to help who needed

இதுதவிர வேறு யாரும் பேசாத நிலையில் டேவிட் வார்னர் கவலையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் டேவிட் வார்னரை தமிழக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் டேவிட் வார்னருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவராக டேவிட் வார்னர் இருந்தாலும் கூட அவர் அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் இந்திய பாடல்களுக்கு மகள்களுடன் நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

அதோடு இந்தியாவில் நடக்கும் போட்டிகளின்போது புஷ்பா படத்தின் ஸ்ரீவல்லி பாடலுக்கு அவர் தொடர்ந்து மைதானத்திலேயே நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அதோடு அவர் பல சந்தர்ப்பங்களில் இந்தியா எனது 2வது தாய்நாடு என தெரிவித்துள்ளார். இதனால் நாட்டை கடந்தும் டேவிட் வார்னருக் இந்தியாவில் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+