ஆந்திராவை நெருங்கும் மிக்ஜாம்.. சென்னையில் இருந்து 130 கி.மீ தொலைவு.. நள்ளிரவில் மழை குறைந்தது
சென்னை: சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து விலகியுள்ளதாகவும், சென்னையில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் கிழக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 12 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சாலைகள் போக்குவரத்து செல்ல முடியாமல் துண்டிக்கப்பட்டுள்ளன. ரயில் தண்டவாளங்களும் மழை நீரினால் சூழப்பட்டுள்ளன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளன. ஒரு சில இடங்களில் குடியிருப்புகளின் கீழ் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன.
சென்னை மடிப்பாக்கம் பகுதியில், தரைத் தளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. கனமழை காரணமாக வேளச்சேரி ஏரி நிரம்பியதால் தண்ணீர் சாலையை சூழ்ந்தது. வேளச்சேரி ஏரி நிரம்பியதால் பல்லாவரத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்லும் சாலையை வெள்ளம் சூழ்ந்தது. சாலையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் அவசியமின்றி வெளியில் வராமல் வீட்டிலே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
130 கி.மீ தொலைவு: மிக்ஜாம் புயலால் சென்னை நகர் முற்றிலுமாக மிதக்கிறது. இந்த நிலையில் சென்னையில் எப்போது தான் மழை நிற்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது புயல் சென்னையை கடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் சென்னையை கடந்ததாக அறிவிக்கப்பட்டாலும் மழை நள்ளிரவு வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து 90 கிமீ தொலைவில் நிலைகொண்டிருந்த மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து விலகியுள்ளதாகவும், சென்னையில் இருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் கிழக்கு வடகிழக்கு திசையில் நிலைகொண்டு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதேபோல் ஆந்திராவின் நெல்லூரை புயல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து 80 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்கு கடலோரப்பகுதிக்கு நெருக்கமாக வந்து மிகப்பெரிய அளவில் போக்கு காட்டிய மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது நாளை காலை 11 மணியளவில் தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
ஆந்திராவின் நெல்லூருக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் கரையை கடக்கும். இந்த புயல் கரையை கடந்த பிறகு தமிழ்நாட்டில் மழைக்கான வாய்ப்பு முற்றிலுமாக குறைந்து வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கிழக்கு திசை காற்று மாறுபாடுகாரணமாக மட்டுமே ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமானது வரையிலான மழைக்கே வாய்ப்பு இருக்கிறது.
12 கிமீ வேகத்தில்: வடகிழக்கு பருவமழையை தீவிரப்படுத்தக்கூடிய சாதகமாண சூழல்கள் அடுத்த ஒரு வாரத்திற்கு இல்லை என்றும் மழை பெய்வதவற்கான சூழல் மிக குறைவாகத்தான் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தற்போது இந்த புயல் சென்னைக்கு கிழக்கு வடகிழக்கு திசையில் 130கி.மீ தொலைவில் நிலைகொண்டு இருப்பதாகவும், இது மேலும் வடக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாலும் இரவு வரை மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நள்ளிரவில் அதாவது சுமார் 1 மணியளவில் மழை சென்னையில் குறைய தொடங்கியது.
இதேபோல் ஆந்திராவின் நெல்லூரை புயல் நெருங்கி கொண்டிருக்கிறது. ஆந்திராவில் இருந்து 70 கி.மீ தொலைவில் இந்த புயல் நிலகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 கிமீ வேகத்தில் தெற்கு ஆந்திர கடற்கரை நோக்கி நகர்கிறது மிக்ஜாம் புயல். நாளை முற்பகல் நெல்லூர் மசூலிப்பட்டினம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும். ஆந்திரா நெல்லூர் தென்கிழக்கில் 50 கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல் நிலைகொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications