120 கிமீ வேகம்.. தமிழகம் உட்பட 4 மாநிலங்களுக்கு நள்ளிரவில் எச்சரிக்கை.. கரையை கடக்கும் முரசு புயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முரசு புயல் காரணமாக கடந்த இரு நாட்களாகவே வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. இதற்கிடையே தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள இந்த அர்னாப் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது. இதனால் ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவான முரசு புய தீவிரப் புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், இன்று (நவம்பர் 2) நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் கரையைக் கடக்க உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Cyclone Murasu

120 கிமீ வேகம்

நெல்லூர் - நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஆந்திரா மட்டுமின்றி வடதமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய முரசு புயல், இன்று திங்கள்கிழமை அதிகாலை தீவிர புயலாக வலுப்பெற்றது. காலை 8.30 மணியளவில் நெல்லூருக்கு கிழக்கு - தென்கிழக்கே 160 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடகிழக்கே 180 கி.மீ. தொலைவிலும் இருந்தது.

இந்த புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நாளை அதிகாலை 4 மணிக்குள் ஆந்திர கடற்கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 120 கிமீ வேகத்தில் காற்று வீசலாம். கரையை கடந்த பிறகு புயல் வலுவிழந்து, செவ்வாய்க்கிழமை காலை மணிக்கு 70 முதல் 80 கிமீ வேகத்தில் காற்று வீசும் வகையிலான புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிர மழை

முரசு புயலின் வெளிப்புறத்தில் உள்ள மழை மேகங்கள் வடதமிழக கடலோர பகுதிகளை தாக்கியதால், நேற்று மாலை முதலே சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று திங்கள்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சென்னையின் பல இடங்களில் மிக கனமழை பதிவானது. கடப்பாக்கம், பாரிமுனை பகுதிகளில் தலா 15 செமீ மழையும், மணலி, சாத்தங்காடு பகுதிகளில் தலா 13 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் புதுச்சேரியின் சில பகுதிகளிலும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், புயல் ஆந்திராவில் கரையை கடந்த பிறகு வடதமிழகத்தில் மழையின் தீவிரம் குறைந்து மிதமான மழையாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் மழை

அதேநேரத்தில் நவம்பர் 5ஆம் தேதி முதல் தென்தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நவம்பர் 5ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நவம்பர் 7ஆம் தேதி வரை கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திரா

அர்னாப் புயலை போலவே முரசு புயலும் ஆந்திராவிலேயே அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. இதனால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து, மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 6 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும், 7 மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே பாதிக்கப்படக்கூடிய கடலோர பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 4ஆம் தேதி பிற்பகல் வரை மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியிலும், ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்பதால் மோட்டார் படகுகள், சிறிய கப்பல்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+