வங்கக்கடலில் புயல் சின்னம்.. சுழற்றி அடிக்கப்போகும் கனமழை! ரெட் அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
சென்னை: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகதி உருவாகியிருக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சில இடங்களுக்கு ரெட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
வங்கக்கடலில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று இந்திய புதிய காற்றழுத்த தாழ்ழவு பகுதி உருவெடுத்திருக்கிறது. இதன் காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்து, இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் அடுத்த 3-4 நாட்களுக்கு கனமழை பெய்யும்.

இதில் மிகுந்த பாதிப்படைய கூடிய மாநிலமாக ஒடிசா இருக்கும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. ஒடிசா மிக கடுமையான பாதிப்பை சந்திக்கலாம். எனவே சில மாவட்டங்களுக்கு ரெட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. 20 செ.மீக்கும் அதிகமான மிக அதித்தீவிர கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கும்.
அதேபோல கங்கை நதிப்படுகையை ஒட்டியமேற்கு வங்க பகுதிகள் மற்றும் ஜார்க்கண்ட், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பரவலாக கனமழை பெய்யும். இது தவிர தெலங்கானா, கடலோர ஆந்திர பகுதிகளில் செப்.10-13 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
வடமேற்கு வங்கக்கடல், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படும். மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும் சில நேரங்களில் 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் நாளை வரை இப்பகுதிகளுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை, இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு வங்கக்கடல் பகுதியில் அதாவது ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி உருவாகி நகர்வதால், நமக்கு நேரடியாக எந்தவித பாதிப்பும் இல்லை. தமிழகத்தில் வழக்கமான லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
