அடுத்தடுத்து புயல்கள் இருக்கு! அதிர்ச்சி கொடுத்த.. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. இப்படி இருக்கையில், நவ.16ம் தேதி வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் துரை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்திருக்கும் பேட்டியில் கூறியதாவது, "வரும் 14ஆம் தேதி மாலைக்குள், வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது, புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Cyclonic Storm

இதை தொடர்ந்து.. மேற்கு, வடமேற்கு திசையில் இது நகர்ந்து, வட ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா பகுதி நோக்கி செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதனுடைய நகர்வு மற்றும் வலிமையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எனவே அடுத்தடுத்து அப்டேட்களை கொடுப்போம்.

புயல்கள் உருவாக, கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருக்க வேண்டும். இது எல்-நினோ காலம் என்பதால், கடலின் மேற்பரப்பு வெப்பநிலை, இயல்பை விட அதிகமாக இருக்கிறது. குறிப்பாக வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் இந்த வெப்பநிலை அதிகமாக இருப்பதால்.. புயல் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன.

கடலின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகமாக இருப்பதாலும், காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதாலும் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள், புயல்கள் உருவாகின்றன.

இதே போல இன்னும் அடுத்தடுத்து புயல்கள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளன. வடக்கிழக்கு பருவ மழை காலம் முடியும் வரை, அடுத்தடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளன. புயல்கள் உருவாகும் இடம் மற்றும் அதன் நகரும் திசை தான், அது சென்று சேரும் இடத்தை தீர்மானிக்கிறது. கடந்த இரண்டு புயல்கள் உருவானது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தான். எனவே, அது ஆந்திரா மற்றும் ஒடிசாவை நோக்கி நகர்ந்தது. அதுவே தெற்கு அல்லது தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயல்கள் உருவானால் அது தமிழகத்தை பாதிக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "மத்திய அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக இன்று காலை (13-11-26) 0530 மணி அளவில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 0830 மணி அளவில் அதே பகுதியில் நிலவுகிறது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 14 ஆம் தேதி வாக்கில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நவம்பர் 15 ஆம் தேதி காலை அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும். இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய வளிமண்டல சுழற்சியிலிருந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் வழியாக மாலத்தீவின் வடக்குப் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது" என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+