வெள்ளக்காடாக மாறிய டெல்லி.. ஒரு மணி நேர மழைக்கு கூட தாக்கு பிடிக்கல! மக்கள் அவதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஒரு மணி நேரம் விடாமல் பெய்த மழை காரணமாக விமான நிலையம், மெட்ரோ நிலையம் என பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. வெள்ளம் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

டெல்லியின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. வெள்ளம் காரணமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டிருக்கிறது.

Delhi airport flooded

ஒரு மணி நேர மழை

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்.சி.ஆர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை
ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. வெறும் 1 மணி நேர கடும் மழைக்கே, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக பல விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டிருக்கின்றன.

விமான நிலையம் மட்டுமல்லாது, டெல்லியின் முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் எந்தப்பக்கம் திரும்பினாலும் டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது.

இந்த மழை செப்.5 வரை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு உத்தரப் பிரதேச பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மத்திய இந்திய பகுதியில் நிலவும் தீவிரமான பருவமழை காற்றழுத்த தாழ்வு நிலைதான் டெல்லியில் பெய்த திடீர் கனமழைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. செப்.6 முதல் மழையின் தீவிரம் குறையலாம். இப்போதைக்கு டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள என்சிஆர் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த கனமழை பெய்து வருவதால், ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+