கனமழை! தத்தளிக்கும் டெல்லி.. யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை.. மக்களுக்கு வார்னிங் கொடுத்த அரசு
டெல்லி: டெல்லியில் 41 ஆண்டுகளில் இல்லாத அளவாக நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பருவ மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பரவலாக மழை பெய்து வருகிறது. 41 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டெல்லியில் 153 மி.மீ. மழை வெளுத்து வாங்கியது. நிவாரண பணியில் ஈடுபடுவதற்காக, அரசு அதிகாரிகளுக்கு ஞாயிறு விடுமுறை ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டனர். இந்த பெருமழையால் டெல்லி வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

டெல்லி மட்டும் இன்றி காஷ்மீர், இமாசலபிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய அண்டை மாநிலங்களில் மழை நீடித்தது. இந்த மழையானது இன்றும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துளது. யமுனை நதியில் நேற்று நீர்மட்டம் 203.18 மீட்டராக இருந்தது. நாளை பகல் 1 மணிக்குள், அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டும் என்று மத்திய தண்ணீர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கு இடையே, ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து உபரி நீரை யமுனை ஆற்றில் ஹரியானா திறந்து விட்டது. ஒரு லட்சம் கன அடிக்கு மேலாக தண்ணீரை ஹரியானா திறந்து விட்ட நிலையில், யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வழக்கமாக யமுனை நதியில் 352 கன அடி திறந்து விடப்படும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் தண்ணீர் திறந்து விடும் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஹரியானா தெரிவித்துள்ளது.

யமுனை நதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். யமுனை நதியில் நீர் மட்டத்தை கண்காணிக்கவும் வெள்ளம் பாதிக்கும் பகுதிகளை கண்காணிக்கவும் 16 கட்டுப்பாட்டு அறைகளை டெல்லி அரசு ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மத்திய நீர் ஆணையம் விடுத்த எச்சரிக்கையில், நாளை (செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணிக்குள், யமுனை நதியில் அபாய அளவான 205.33 மீட்டரை தாண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. வடமேற்கு இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிறிய ஓடைகள், வடிகால்கள் சேதம் அடைந்தூள்ளன. ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேசங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இமாசல பிரதேசத்தில் பியாஸ் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications