நடுங்கும் குளிர்.. மழையும் இருக்கு! சென்னை வானிலை ஆய்வு மையம் கொடுத்த எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி எடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "இன்றும் நாளையும் தென் தமிழக மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் மற்றபடி தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானில் நிலவக்கூடும் காரைக்கால் பகுதியில் அதிகாலை வேளையில் லேசான பணிமோட்டம் இருக்கும்.

டிசம்பர் 14ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒரு இடங்களிலும் காரைக்கால் பகுதியிலும் லேசான மழை பெய்யக்கூடும் ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவும்.
டிசம்பர் 15ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் புல் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்.
டிசம்பர் 16ஆம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 17ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 18ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்த வரை, இன்று தொடங்கி முதல் டிச.14 வரை தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2" செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியும், இயல்பை விட குறைவாகவும் இருக்கக்கூடும்.
டிச.13 மற்றும் 14ம் தேதிகளில் தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (12-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (13-12-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications