டிட்வா எதிர்பார்த்த மழையை கொடுத்ததா? சென்னையில் வடகிழக்கு பருவமழை நிலவரம் இதுதான்!
சென்னை: டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு இருந்தது. இருப்பினும் மழை கடந்த ஆண்டை போல இல்லை என்ற பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில், சென்னையில் பெய்த மழையின் அளவு என்ன? என்பது குறித்து வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்திருக்கிறது.
அக்.1ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்தது. இதன் காரணமாக சென்னை தொடங்கி அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழை பெய்திருந்தது. குறிப்பாக இலங்கையை ஒட்டி உருவாகி சென்னையை நோக்கி வந்த டிட்வா புயல், சென்னைக்கு அதிக அளவில் மழையை கொடுத்திருந்தது.

இருப்பினும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சென்னை இயல்பாக பெறும் மழையின் அளவை விட 2% குறைவாகே பெற்றிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையில் இயல்பாக 731.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 715.1 மி.மீ. மழை பெய்துள்ளது.
சென்னையை ஒட்டி மாவட்டங்களை பொறுத்தவரை, திருவள்ளூரில் இயல்பாக 562 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 710.5மி.மீ. மழை பெய்துள்ளது. காஞ்சிபுரத்தில் இயல்பாக 528.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 448.9 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 15% குறைவாகும். அதேபோல செங்கல்பட்டில் 448.7 மி.மீ மட்டுமே மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 29% குறைவாகும். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில்தான் பருவமழை இயல்பை விட மிக குறைவாக பதிவாகியிருக்கிறது.
மொத்தமாக செங்கல்பட்டு, கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பூர் என 6 மாவட்டங்களில் பருவமழை 20%க்கும் வரை அடிவாங்கியிருக்கிறது. அதிகபட்ச மழைப்பொழிவு எனில், திருநெல்வேலி மாவட்டத்தில் 961.2 மி.மீ அளவுக்கு பெய்திருக்கிறது. இது இயல்பான மழையை விட 119% அதிகமாகும்.
விருதுநகர், வேலூர், திருவாரூர், திருவள்ளூர், தென்காசி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை என 7 மாவட்டங்களில் பருவமழை 20%க்கும் அதிகமாக பெய்திருக்கிறது.
அதேபோல தற்போது தமிழ்நாடு முழுவதும் குளிரின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. சென்னை, ஓசூர், திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் குளிரின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் டிச.15-20 தேதிகளுக்குள் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications