சென்னையில் நேற்று மாலை 6 மணி முதல் இப்போது வரை பெய்த மழை எவ்வளவு தெரியுமா? சோழிங்கநல்லூர் தான் டாப்
சென்னை : சென்னையில் திங்கள் கிழமை மாலை 6 மணி முதல் இன்று மாலை 6 மணி வரை 4.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 செ.மீ மழை பதிவாகி உள்ளது. சென்னையில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது, வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை அறிவித்தது

இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. '
இதன் காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று காலையில் பெய்ய தொடங்கிய மழை தற்போது வரை விட்டு விட்டு தொடர்கிறது. சென்னையில் நேற்று மாலை 6 மணிமுதல் இன்று மாலை 6 மணி வரை 4.6 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக சோழிங்கநல்லூரில் 7.29 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
இதேபோல் கோடம்பாக்கத்தில் 7 செமீ மழையும், ஆலந்தூரில் 7 செமீ மழையும், உத்தண்டியில் 6.6 செமீ மழையும், தேனாம்பேட்டையில 6.3 செமீ மழையும், அடையாறில் 6 செமீ மழையும் பெய்துள்ளது. பெருங்குடியில் 5.8 செமீ மழையும், மீனம்பாக்கத்தில் 5.8 செமீ மழையும், அண்ணா நகரில் 5 செமீ மழையும் பெய்துள்ளது. வட சென்னையில் மாதவரம், மணலி, புழல், தண்டையார் பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் 3 செமீ முதல் 5 செமீ வரை மழை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதேபோல் சென்னை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications