மிக்ஜாம் புயலுக்கு யார் பெயர் வைத்தது? அர்த்தம் என்ன தெரியுமா? ரியாலிட்டியில் பக்கா பொருத்தம்!
சென்னை: சென்னையை புரட்டி போடும் மிக்ஜாம் புயலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? யார் பெயர் சூட்டியது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வங்கக் கடலில் நிலவி வரும் மிக்ஜாம் புயல் புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னைக்கு கிழக்கு- தென்கிழக்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகல் மத்தியமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வரக் கூடும். தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும். தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகரும்.
நாளை காலை தெற்கு ஆந்திரா கடற்கரை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் நள்ளிரவு முதல் சென்னையில் பெய்து வரும் மழையால் வெள்ள நீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளுக்குள் மழை நீர் தேங்கியுள்ளது.
சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அது போல் தண்டவாளத்தில் தேங்கியுள்ள வெள்ள நீர் காரணமாக மின்சார ரயில்கள் இன்று முழுவதும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளது. அபார்ட்மென்ட்களில் தண்ணீர் ஆறு போல் ஓடத் தொடங்கிவிட்டது. கார்கள் மூழ்கியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின்சாரம் இல்லை. மிக்ஜாம் புயல் கஜா, வர்தாவை போல் அதிக காற்றை கொடுக்காது.
ஆனால் மிகப்பெரிய மழையை கொடுக்கும் என்றார்கள். அதற்கேற்ப நிறைய மழையை கொடுத்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த புயலால் பேருந்து நிலையம், ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிக தண்ணீர் தேங்கியுள்ளது.
இத்தனை இழப்புகளை கொடுக்கும் இந்த புயலுக்கு யார் பெயர் வைத்தது தெரியுமா. மியான்மர் நாடு. இந்த புயலுக்கு என்ன அர்த்தம் தெரியுமா. வலிமை என்று ஒரு அர்த்தமும் மீள்தன்மை, விரியும் திறன் (Strength or Resilience) என்பதாகும். வலிமை என்ற அர்த்தத்திற்கு ஏற்ப மழையும் காற்றும் பலமாகவே இருக்கிறது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications