வந்தாச்சு வடகிழக்கு பருவமழை! அக்.31 வரை சென்னையில் வானிலை நிலவரம் என்ன?.. நார்வே ரிப்போர்ட் இதோ!
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் முழுவதும் சென்னையில் எப்படிப்பட்ட வானிலை நிலவும் என்பது குறித்து நார்வே வானிலை மையத்தின் அறிக்கையை பார்க்கலாம்.
தமிழகம், கேரளம், தெற்கு கர்நாடகம், தெற்கு ஆந்திரா, ராயசீலா ஆகிய பகுதிகளுக்கு மழைப் பொழிவை கொடுப்பது வடகிழக்கு பருவமழை. ஏற்கெனவே இருந்த தென்மேற்கு பருவமழை காலம் நேற்று முன் தினத்துடன் முடிவடைந்துவிட்டது.

இந்த தென்மேற்கு பருவமழை விலகாமல் இருந்ததே வடகிழக்கு பருவமழை தீவிரமடையாமல் இருப்பதற்கான காரணம் என்கிறார்கள். மேலும் இதனால் வடகிழக்கு பருவமழை தென் இந்தியாவில் தாமதமாக தீவிரமடையும் என்கிறார்கள்.
இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்தம் தொடங்கியுள்ளது. அது போல் அரபிக் கடலில் தேஜ் எனும் புயல் மிகத் தீவிர புயலாக மாறியுள்ளது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று காலை சென்னையின் சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இன்றைய தினம் சென்னையில் வெயில் எட்டி பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்த மாதம் எப்போதெல்லாம் மழை பெய்யும் என்பது குறித்து நார்வே வானிலை மையம் கணித்துள்ளதை பார்க்கலாம்.
அதாவது இந்த மாதம் 31 ஆம் தேதி வரை சென்னையில் மழைக்கு வாய்ப்பே இல்லையாம். வெயிலும் மேக மூட்டமும் மாறி மாறி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை நவம்பர் மாதம் மட்டுமே தீவிரமடைய வாய்ப்பிருக்கலாம் என தெரிகிறது. காற்றை அடிப்படையாக கொண்டே இந்த வானிலை தகவல்கள குறிக்கப்படுகிறது.
ஆனால் அந்த காற்றின் திசை மாறினாலும் திடீரென வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவாகினாலும் இந்த கணிப்புகளில் மாற்றம் ஏற்படலாம். அதிலும் 31 ஆம் தேதி மாலை நிலவரம் நார்வே ரிப்போர்ட்டில் கொடுக்கப்படவில்லை. ஒரு வேளை அன்றைய தினம் வானிலையில் ஏதேனும் மாற்றங்கள் இருக்கலாம் என தெரிகிறது. பொதுவாக 5 நாட்களுக்கு உண்டான வானிலை கணிப்புகளை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு மேல் கணிப்பது சில சமயங்களில் தவறாக போகலாம் என்பதே வானிலை மைய ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications