ஊட்டி பக்கம் போயிடாதீங்க மக்களே! வெதர்மேன் கொடுத்த முக்கிய வார்னிங்! ரொம்ப முக்கியம்!
சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. இதன் காரணமாக ஊட்டியில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், நிலச்சரிவு அபாயம் இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது x பக்கத்தில் பதவிட்டிருப்பதாவது, "இன்று தமிழக வானிலை நிலவரத்தை பொறுத்தவரை, தென்மேற்கு தமிழகத்தில் அதிக மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.

உள் மாவட்டங்களில் மழை இருக்கு
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. பருவமழை மாற்ற காலகட்டம் இது. அதாவது தமிழ்நாடு தென்மேற்கு பருவமழையிலிருந்து விலகி.. வடகிழக்கு பருவமழையில் நுழைகிறது. எனவே மாநிலத்தின் உட்புற மற்றும் தென் மாவட்டங்களில் மழை தீவிரமாக உள்ளது.
ஊட்டிக்கு போகாதீங்க
குன்னூர் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால்.. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கும் பகுதியில் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அரசு, வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.
சென்னைக்கு மழை எப்படி இருக்கும்?
சென்னையை பொறுத்தவரை மழைக்கு இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும். சென்னைக்கு மழை கிடைப்பதற்கான வாய்ப்பு வர கொஞ்ச நாள் ஆகும். அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதியில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும், இம்மாதத்தின் ஒட்டுமொத்த மழை அளவு இயல்பை விட குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.
குறையும் மழை
சென்னையில் அக்டோபர் மாதத்திற்கான இயல்பான மழை அளவு 300 மி.மீ ஆகும். மாதத்தின் பிற்பகுதியில் மழைப்பொழிவு அதிகரித்தாலும்.. இம்மாத்தின் மொத்த மழை அளவு, இயல்பை விட குறைவாகவே இருக்கும். இது சென்னை மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டுக்கும் இது பொருந்தும்" என கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
