மழை முடிந்தது.. இனி வறண்ட வானிலைதான்! ஹாட் அப்டேட் கொடுத்த வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் மழை லேசாக எட்டி பார்த்திருந்தது. இந்நிலையில், இனி வறண்ட வானிலைதான் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில், "மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 5 முதல் 9ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அடுத்த 5 தினங்களுக்கான வெப்பநிலை:
இன்று முதல் 7ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல இன்று முதல் 7ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (03-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (04-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், வங்கக்கடல் பகுதிகளில் இன்று தொடங்கி 7ம் தேதி வரை எச்சரிக்கை ஏதும் இல்லை. அரபிக்கடல் பகுதியை பொறுத்த வரை, இன்று மாலத்தீவு லட்சதீவு பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை முதல் 7 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications