வரலாறு காணாத மழை.. பாலைவன தேசமான துபாயை புரட்டிப்போட்ட வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது, விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஓமனில் 18 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.
ஏப்.15 மற்றும் ஏப்.16ம் தேதிகளில் கனமழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதன்படி இடி, மின்னலுடன் மழையும், சூறாவளிக்காற்றும் வெளுத்து வாங்கியிருக்கிறது. மழை காரணமாக துபாயின் மிக முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்கியதால் அவை மூடப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் முட்டி அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.

வரலாறு காணாத மழை காரணமாக துபாய் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் கார்கள் குப்பைகளை போல மிதக்கும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் வீடியோக்களாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல, உலகின் இரண்டாவது பிஸியான விமான நிலையமான துபாய் ஏர்போர்ட் முழுவதும் மழை நீர் தேங்கியிருக்கிறது.
எனவே ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச விமான போக்குவரத்து கடும் பாதிப்பை சந்தித்திருக்கிறது. விமானங்கள் மழை நீரில் நீந்தியவாறு செல்லும் வீடியோக்களும் சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.
தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் வீட்டிலிருந்தே தங்கள் வேலையை செய்யுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளன. ஓமனை பொறுத்த அளவில் மழை வௌ்ளத்தில் சிக்கி பள்ளி வாகனம் அடித்துச் செல்லப்பட்டதில் 10 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதேபோல மழையில் சிக்கி தற்போது வரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த அளவுக்கு பெரும் மழை வெள்ளத்தை நாங்கள் பார்த்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இந்த மழைக்கு காரணம் செயற்கை முயற்சிகள்தான் என்றும் சொல்லப்படுகிறது. அதாவது துபாய் உள்ளிட்ட அரபு நாடுகள் இயல்பில் அதிக வெப்பம் நிறைந்த பகுதிகளாகும். இங்கு மழையை ஏற்படுத்த செயற்கை முறையில் அவ்வப்போது சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. அந்த வகையில் சமீபத்தில் எடுத்த முயற்சிகள் காரணமாக இந்த பெருமழை பெய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
மழை வெள்ளம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரசு எமிரேட்ஸ் அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications