Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்செந்தூர் கடலே.. நிறம் மாறிடுச்சு பாருங்க.. அப்படியே அரண்டு போன மக்கள்! ஏன் இப்படி நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வாரம் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருச்செந்தூர் கடலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் சரியாக இன்னும் பல காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.

Due to extreme flooding: Tiruchendur beach is known for its blue sea coast has changed its color

சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.

அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.

அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.

தென் மாவட்ட வெள்ளம்: இதேபோல்தான் கடந்த வாரம் தென் மாவட்டங்களிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த முறை புயல் உருவாகவில்லை. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கன்னியாகுமரிக்கு கீழே கடல் பகுதியில் நகராமல் நிலைகொண்டு இருந்தது. இதுதான் மழைக்கு காரணம்.

பொதுவாக.. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி கடலுக்கு மேலே இருக்கும் போது கடலில் மிக கனமழையை கொடுக்கும். அதுவே நிலத்திற்கு அருகே இருக்கும் போது அது நிலத்தில் கனமழையை கொடுக்கும். அதுவே ஒருவேளை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் இருந்தால் நிலப்பகுதியில் மிக மிக அதிக கனமழையை தரும்.

அதிலும் மேலடுக்கு சுழற்சியை விட வளிமண்டல கீழடுக்கு சுழற்சி பூமிக்கு மிக அருகில் இருக்கும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகராமல் ஒரே இடத்தில் குமரிக்கு அருகிலேயே இருந்தது. இதை வளிமண்டல கீழடுக்கு சுழற்சியை நோக்கி காற்று தொடர் நெல்லை , தென்காசி, தூத்துக்குடி பக்கத்தில் இருந்து வந்து பெரிய சுழற்சியை ஏற்படுத்தியதே.. 4 மாவட்டங்களில் அதி தீவிர கனமழை பெய்ய, வெள்ளம் ஏற்பட காரணம் ஆகும்.

கடலில் ஏற்பட்ட மாற்றங்கள்: கடந்த வாரம் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக திருச்செந்தூர் கடலில் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இந்த மாற்றங்கள் சரியாக இன்னும் பல காலம் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

திருச்செந்தூர் கடற்கரை மன்னார் வளைகுடாவின் ஒரு பகுதியாகும், இது நீல கடல் கடற்கரைக்கு பெயர் பெற்றது. அதாவது கடல் நல்ல நீலமாக, தெளிவாக இருக்கும். ஆனால் தற்போது அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக, ஆற்றில் அதிக வண்டல் படிந்ததால் கடலின் நிறம் மாறியது. வெள்ளமும் விவசாய நிலத்தின் மேல் மண்ணை கடலில் அடித்துச் சென்றது. இதனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகும், கடல் இன்னும் சேற்றுப் பழுப்பு நிறத்தில் உள்ளது.

நீல நிறம் மாறி கடல் அப்படியே பழுப்பு நிறத்தில் அழுக்கடைந்தது போல காட்சி அளிக்கிறது. இந்த தோற்றம் மக்கள் இடையே விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+