வெளுத்து வாங்கும் கனமழை.. நீலகிரி மாவட்டத்தில் 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக 2 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் நேற்று முன்தினம் இரவு முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

நேற்றைய தினம் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் சில இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தான் நேற்று இரவும் நீலகிரி மாவட்டம் பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகாக்களின் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்றைய தினம் நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தூலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ளார்.
நேற்றைய தினம் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் இன்றும் கூடலூர், பந்தூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications