கோவையில் கொட்டி தீர்த்த கனமழை! கலெக்டெர் ஆபிசில் அப்படியே சரிந்த பைக் பார்க்கிங் மேற்கூரை! ஷாக்
கோயம்புத்தூர்: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கோடை மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று கோவையில் கனமழை வெளுத்து வாங்கியிருக்கிறது. இதனால், சில இடங்களில் வெள்ளம் போல மழைநீர் தேங்கியுள்ளது.
வழக்கமாக தமிழகத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் கோடை வெயில் தொடங்கும். ஆனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் பிப்ரவரி இறுதியில் வெயில் தொடங்கிவிட்டது. மார்ச்சில் ஏற்றம் கண்ட வெயில், ஏப்ரலில் உச்சத்தை தொட்டது. தமிழகத்தின் பரவலான மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது.

குறிப்பாக ஈரோடு, கோவை, கரூர் என கொங்கு மாவட்டங்கள், அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், வேலூர், திருப்பத்தூர், திருத்தணி என வட மாவட்டங்களில் வெயில் 105 டிகிரிக்கு அதிகமாக பதிவாகியிருந்தது. இப்படி இருக்கையில் தற்போது கோடை மழை தொடங்கியிருக்கிறது.
ஆரம்பத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி என தென் மாவட்டங்களில் தலையை காட்டிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்களை நோக்கி ஏற தொடங்கியது. 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவான பகுதிகளில் மழை புரட்டி எடுத்தது. ஏற்காடு, ஈரோடு, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த மழை தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், கோவையில் இன்று பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் போல மழை நீர் தேங்கியுள்ளது. குறிப்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பைக் பார்க்கிங் மேற்கூரை இடிந்து விழுந்திருக்கிறது. இதனால் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. கடந்த சில நாட்களாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக பதிவாகியிருந்தது.
முன்னெப்போதும் இல்லாத அளவில் நீலகிரியில் 29 டிகிரி செல்சியஸ் அளவில் வெயில் பதிவாகியிருந்தது. இதனால் கால்நடைகள் மற்றும் காட்டு மாடுகள் நீர் இன்றி உயிரிழந்தன. மட்டுமல்லாது கடுமையான குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டிருந்தது. எனவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இப்படி இருக்கையில் இந்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மே 19, 20, 21 ஆகிய தேதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல இன்றும் 22ம் தேதியும் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், "நாளை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரிஸ இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி. இராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர். திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரிம இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
21ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரி இடங்களில் அதி கனமழையும், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிம இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர். பெரம்பலூர். திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம். தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தென்காசி, திருநெல்வேலி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல். கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரி இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
23ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications