விடிய விடிய கொட்டிய கனமழை.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எங்கெல்லாம் லீவ்?
சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களிலும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் மாதம் கனமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் சென்னை உட்பட வடமாவட்டங்களும் தென் மாவட்டங்களும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

ஆனால், அதன் பிறகு மாவட்டத்தில் பெரியளவில் மழை இல்லாமல் இருந்தது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மீண்டும் நல்ல மழை பெய்து வருகிறது.
கனமழை: நேற்றைய தினமே மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டும் என்றும் இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் வானிலை மையம் எச்சரித்திருந்தது. தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவே இப்படி பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இதற்கிடையே நேற்று இரவு முதலே தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று காலை 6 மணி முதல் 21.2 செம மழை கொட்டி தீர்த்துள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மரக்காணத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: இப்படிப் பல மாவட்டங்களில் கனமழை கொட்டி வரும் நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக இன்று ஜன.8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு மட்டும்: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், கனமழையால் இப்போது புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை கீழ்வேளூர் வட்டத்தில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் வேதாரண்யம், திருக்குவளை வட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications