மழை நேரத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இந்த 16 பாயிண்ட்ஸை கவனிங்க.. மின்சார வாரியம் எச்சரிக்கை!
சென்னை: மழைக்காலத்தில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ளது. மழைக்காலத்தில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத காரியங்களை, மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தீவிரமடையத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வடமாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வரும் நிலையில், கோவை மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி வருகிறது.

மின்சார வாரியம் எச்சரிக்கை: இந்நிலையில் மழைக்காலங்களில் ஏற்படும் மின்சார விபத்துகளை தடுக்கவும், பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்தும் மின்சார வாரியம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதனை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மக்கள் நலன் காக்கும் மன்னவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியம் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பொதுமக்களும் மின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாய் இருந்திட வேண்டுகிறேன்." எனத் தெரிவித்து, வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

மின்சார விபத்துகளை தவிர்ப்பது எப்படி?:
1. வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCBஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்.
2. ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. மேலும் குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது.
3. ஃப்ரிட்ஜ், - கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிக்கு நில இணைப்புடன் (Earth) கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
4. பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக்கூடாது.
5. உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள், மற்றும் பழுதான மின் சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருப்பின், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
6. சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும் . குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது.
7. விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.
8. இடி, மின்னல், காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்.

9. மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது.
10. மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
11. மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.
12. மின் கம்பத்திலோ, மின் கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக் கூடாது.
13. மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.
14. மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.
15. டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.
16. வீடுகளில்,மின் கம்பங்களில் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயலக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications