அடுத்த 3 மணி நேரம்.. இங்கெல்லாம் மழை அடித்து வெளுக்க போகிறது.. தமிழ்நாடு வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் ஆங்காங்கே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேகம்கூட்டதுடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 12.05.2024 முதல் 16.05.2024 வரை: அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரிரு இடங்களில் 2'-3"
செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40-41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39 செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34"-37" செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: 12.05.2024 முதல் 16.05.2024 வரை: காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55% ஆகவும், மற்ற நேரங்களில் 60-85% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 60-85% ஆகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை. ஏதுமில்லை.
நேற்றைய நிலவரம்: நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவையில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
பாம்பன் (ராமநாதபுரம்) 7, ஈரோடு பொதுப்பணித்துறை லக்கினம்பட்டி தலா 6, பரமக்குடி (ராமநாதபுரம்). சேலம் (சேலம்) ஆத்தூர் சேலம் (சேலம்) ஆதார் (கோயம்புத்தூர்) தலா 5, மந்தம் (திண்டுக்கல்), ராசிபுரம் (நாமக்கல் பொள்ளாச்சி (கோயம்புத்தூர்) தலா 4, பாண்டவரடி (திருவாரூர் எடப்பாடி (சேலம்). வால்பாறை PAP (கோயம்புத்தூர்). திற்பரப்பு (கன்னியாகுமரி) திருப்புவனம் (சிவகங்கை). திருச்சிராப்பள்ளி சந்திப்பு (திருச்சிராப்பள்ளி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) திருச்சிராப்பள்ளி நகரம் (திருச்சிராப்பள்ளி), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்). விரசுார் அணை (மதுரை தலா 3), மணியாச்சி (தூத்துக்குடி) ஆழியார் (கோயம்புத்தூர்). நன்னிலம், பவானி இளையாங்குளம் (சிவகங்கை), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), கமுதி (ராமநாதபுரம்), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி புத்தன் அணை (கன்னியாகுமரி சுருளக்கோடு (கன்னியாகுமரி) நீடாமங்கலம் (திருவாரூர்). அரண்மனைப்புதூர் (தேனி), கமுதி ARS (ராமநாதபுரம்), டேனிஷ்பேட்டை (சேலம்) தலா 2. மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி, அன்ணகெடங்கு (கன்னியாகுமரி) கடம்பூர் (தூத்துக்குடி) சிற்றாறு (கன்னியாகுமரி), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), தர்தலை (பெரம்பலூர்) சிவகிரி (தென்காசி), சந்திர் KVK AWS (சேலம், உத்தமபாளையம் தேனி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி, குமாரபாளையம் (நாமக்கல் புதுக்கோட்டை (புதுக்கோட்டை கோவில்பட்டி வேதநாதம் (தூத்துக்குடி), கருப்பாநதி கருப்பாநதி அணை (தென்காசி), வெம்பக்கோட்டை விருதுநகர், ராமேஸ்வரம் (ராமநாதபுரம்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (கோயம்புத்தூர்), மதுரை விமானநிலையம் மதுரை. வெட்டிக்காடு (தஞ்சாவூர்), ஏற்காடு (சேம்), பாலமோர் கனியாருமணியன் (கன்னியாகுமரி, தம்மம்பட்டி (சேலம் மேட்டூர் (சேலம்) வாழப்பாடி ARS (சேலம்), ஏற்காடு AWS (சேவம்) தலா 1.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications