நைட் முழுக்க ஜில் கிளைமேட் தான்.. இந்த 13 மாவட்டங்களில் இரவு கொட்ட போகுது மழை.. வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக் காலம் வந்துவிட்ட நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேநேரம் ஆங்காங்கே சற்று மழையும் பெய்து வெப்பத்தைக் குளிர்வித்து வருகிறது. இதற்கிடையே இன்று இரவு 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது கோடைக் காலம் நிலவி வருகிறது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் மே மாதம் அக்னி நட்சத்திரம் சமயத்தில் தான் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆனால், இப்போதெல்லாம் மார்ச், ஏப்ரல் மாதமே வெப்பம் அதிகரிக்க ஆரம்பித்துவிடுகிறது. இந்தாண்டும் அதற்கு விதி விலக்கு இல்லை.

கடந்த பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த மாதம் சில இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய நிலையில், இந்த மாதம் பெரும்பாலான இடங்களில் வெப்பம் உச்சத்திற்குப் போய் வருகிறது. இந்த அதீத வெப்பத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அடுத்த 3 மணி நேரத்தில் மழை
அதேநேரம் ஆங்காங்கே சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. மாலை நேரங்களில் பெய்யும் இந்த மழை வெப்பத்தைக் குறைக்கப் பெரிதும் உதவுகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்கள்
அதாவது இரவு 7 மணி வரை திருவண்ணாமலை, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல மதுரை மற்றும் கரூர் மாவட்டங்களில் இரவ 10 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகச் சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் வெப்பம்
இன்றைய தினம் வெப்பத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல ஈரோட்டில் 103.28 வெப்பமும் கரூர் பரமத்தியில் 103.1 டிகிரி வெப்பமும் பதிவாகியுள்ளது. தஞ்சை 102.2 டிகிரி பாரன்ஹீட், சேலம் 101.66 டிகிரி பாரன்ஹீட், திருத்தணி 100.94 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வானிலை மையம்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்றும் நாளையும் (ஏப்ரல் 27, 28) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 29 முதல் மே 2ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (27-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (28-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications