அடுத்த 3 மணி நேரம்.. இந்த 5 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை.. இரவு குளுகுளுனு இருக்கும் போங்க!
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக் காலத்தில் பெய்யும் இந்த மழையால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கோடைக் காலம் தொடங்கியது முதலே மாநிலத்தில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல இடங்களில் வெப்பம் அசால்டாக 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிப் பதிவாகிறது. இதனால் பொதுமக்கள் அசவுகரியத்தை எதிர்கொள்கிறார்கள். வெளியே கூட செல்ல முடியாத சூழலே நிலவுகிறது.

அடுத்த 3 மணி நேரம்
அதேநேரம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழையும் பெய்து வருகிறது. ஏப்ரல் மாதம் பெய்யும் இந்த எதிர்பாராத மழை வெப்பத்தைக் குறைத்து பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எந்த மாவட்டங்கள்
இரவு 10 மணி வரை திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மழை கரணமாகச் சில இடங்களில் மழை நீர் தேங்கலாம் என்றும் சாலையிலும் நீர் தேங்கலாம் என்பதால் டிராபிக் பாதிப்பு ஏற்படலாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் கொடுத்த அலர்ட்
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த தினசரி செய்திக்குறிப்பில், "தென்னிந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டலக் கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்குத் திசைக் காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று (ஏப்ரல் 20) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அசவுகரியம் ஏற்படும்
இயல்பு நிலையிலிருந்து வெப்ப அளவின் வேறுபாட்டைப் பொறுத்தவரை இன்று முதல் ஏப்ரல் 22 வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கு
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று (20-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (21-04-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்றார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications