மழை+ சூறைக்காற்று.. அடுத்த 3 மணி நேரம் இந்த 11 மாவட்டங்களில் பெரிய சம்பவம்! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இம்மாத தொடக்கத்தில் மழை சற்றே குறைந்திருந்த நிலையில், இப்போது மீண்டும் மாநிலம் முழுக்கவே பரவலாக மழை ஆரம்பித்துவிட்டது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 10 மணி வரை மழை பெய்யும் என்பதால் இன்று குளிர்ச்சியான இரவே இந்த மாவட்டங்களில் இருக்கும்.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் நல்ல மழை பெய்தது. குறிப்பிட்ட இடங்களில் மட்டும் என இல்லாமல் மாநிலம் முழுக்கவே பரவலாக மழை பெய்தது. இதனால் மாநிலத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான வானிலையே நிலவியது. குறிப்பாகச் சென்னையில் கூட கடந்த மே மாதம் நல்ல மழை பெய்தது. இந்த மாதம் தொடங்கிய பிறகே மழை கொஞ்சம் கேப் விட்டிருந்தது.

11 மாவட்டங்களில் மழை
இதற்கிடையே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், மாநிலத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மழை தொடங்கிவிட்டது. கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாகவே மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது இரவு 10 மணி வரை நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இரவு வரை மழை கொட்டும்
அதேபோல தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூரில் லேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சில சாலைகளில் நீர் தேங்கலாம் என்றும் டிராபிக் பாதிப்பும் ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரவு 10 மணி வரை மழை கொட்டும் என்பதால் இந்த மாவட்டங்களில் இன்று குளிர்ச்சியான இரவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சூறைக்காற்று
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மழை தொடரும்
நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications