அடுத்த 3 மணி நேரம்.. இந்த 6 மாவட்டங்களில் "இடி மின்னலுடன்" பெய்ய போகுது மழை! கோடை வெயிலுக்கு குட்பை
சென்னை: தமிழகத்தில் கோடை மழை கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு ஆறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப். மாதம் முதலே தமிழ்நாட்டில் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவமழை முடிந்த உடன் அதிகரிக்கத் தொடங்கிய வெப்பம், பிப். மாதம் சதமடிக்கத் தொடங்கியது.

ஈரோடு, கரூர் பரமத்தி என பல்வேறு இடங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
உச்சத்தில் வெப்பம்: இப்படி கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா, தெற்கு தமிழகம், மேற்கு தமிழகப் பகுதிகளில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. பிப். மாதம் தொடங்கிய வெயில் படுத்தி எடுத்து வந்த நிலையில், இந்த மழை மிகப் பெரிய நிம்மதியைக் கொடுப்பதாக இருக்கிறது. அதன்படி இன்றும் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.
6 மாவட்டங்களில் மழை இருக்கு: இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் அலர்ட் கொடுத்துள்ளது. மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கலாம் என்றும் போக்குவரத்து நெரிசலும் சில இடங்களில் ஏற்படலாம் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு இருக்கிறது. இன்று நாள் முழுக்க நல்ல மழை இருக்கும் என்பதால் பொதுமக்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்கள்.
பரவலாக மழை: கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைத் தென் தமிழகப் பகுதிகளில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால், புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 70 செமி மழை பெய்துள்ளது. தொடர்ந்து போடிநாயக்கனூர் , குன்னூர், குன்னூர் PTO தலா 60 செமி மழை பெய்துள்ளது. அதேபோல எச்சன்விடுதி (தஞ்சாவூர்), பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி) தலா 50 மழை பெய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வெறும் தொடக்கம் தான்.. வரும் நாட்களில் இருக்கு.. மழை குறித்து வெதர்மேன் கொடுத்த ஜில் அப்டேட்
அதிகபட்ச வெப்பநிலை: வட தமிழக மாவட்டங்களின் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை விட 2° - 3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. தென் தமிழகத்தில் இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 40.0° செல்சியஸ், திருப்பத்தூரில் 39.8° செல்சியஸ் பதிவாகியுள்ளது. வட தமிழக கடலோரப் பகுதிகள், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 31° - 36° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20° - 30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 35.6° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 34.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications