வெளியே போகாதீங்க.. அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில்.. இடி மின்னலுடன் கொட்ட போகுது கோடை மழை!
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மொத்தம் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாகக் கோடைக் காலத்தில் மே மாதம் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால், இந்த முறை மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் வெப்பம் அப்படி இருந்தது.. மே மாதம் பரவலாக மழை பெய்தே வருகிறது.

அதிலும் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தில் பரவலாக பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் கோடை வெப்பம் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
19 மாவட்டங்களில் மழை: ஏற்கனவே மாநிலத்தில் அதி கனமழை காரணமாக சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அடுத்த 2 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இரவு 7 மணி வரை: இரவு 7 மணி வரை ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, திண்டுக்கல் தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம். மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வேலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கோவை, திருப்பூர், கரூர், மதுரை, விருதுநகர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த 2 மணி நேரத்திற்கு இந்த 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "இன்று மே 19ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை தொடரும்: நாளை மே 20ஆம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications