வலிமைபெற்ற ஹாமூன் புயல்.. திடீரென நகர தொடங்கியது! தமிழ்நாட்டை தாக்குமா? எப்போது கரையை கடக்கும்?
சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'ஹாமூன்' புயல் வடகிழக்கு திசையில் நகர்கிறது; நாளை நண்பகலில் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மத்தியமேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று உள்ளது.

ஈரான் நாடு பரிந்துரைந்துள்ள 'ஹாமூன்' என்ற பெயர் இந்த புயலுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று தீவிர புயலாக வலிமை அடையும். அதி தீவிர புயலாக வலிமை அடையும் முன் இது நாளை நண்பகலில் வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த புயல் காரணமாக நேரடியாக தமிழ்நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாது. புயல் எதிர் திசையில் நகர்வதால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் நேரடியாக மழை பெய்யாது.
வானிலை எப்படி இருக்கும்?: இந்த நிலையில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,
24.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
25.10.2023 மற்றும் 26.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.10.2023 முதல் 28.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), மேலூர் (மதுரை) தலா 5. சிங்கம்புணரி (சிவகங்கை) 4, தல்லாகுளம் (மதுரை). மதுரை நகரம் (மதுரை). மதுரை வடக்கு (மதுரை). இடையப்பட்டி (மதுரை). தானியமங்கலம் (மதுரை), கல்லிக்குடி (மதுரை) தலா 3, மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), திருமங்கலம் (மதுரை), விரகனூர் அணை (மதுரை), பேரையூர் (மதுரை). குளித்தலை (கரூர்), திருவாரூர் (திருவாரூர்), மசிறி (திருச்சிராப்பள்ளி), காரியாப்பட்டி (விருதுநகர்) தலா 2, மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), விராலிமலை (புதுக்கோட்டை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), வளசரவாக்கம் (சென்னை). மண்டலம் 06 D65 கொளத்தூர்
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
புழுதி புயலில் சிக்கிய ராஜஸ்தான்.. வீடுகளை மூடியதால் மூச்சுவிட முடியாமல் மக்கள் தவிப்பு.. வீடியோ பாருங்க -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications