தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்.. மக்களே ரொம்ப கவனமாக இருங்க.. வானிலை மையம் தந்த வார்னிங்!
சென்னை: தமிழகத்தின் வட கிழக்கு மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக வெப்ப அலை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ளது. கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலேயே வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. கோடைக்காலம் தொடங்கும் முன்பே சுட்டெரித்த வெயிலால் மக்கள் கதி கலங்கினர். வெயில் காலம் வருவதற்கு முன்பே இப்படி வெயில் அடிக்கிறதே கோடைக்காலம் வந்தால் என்ன ஆகும் என மக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், அவ்வப்போது மழை வந்து சற்று ஆறுதல் தந்தது.

இன்று வெப்ப அலை வீசும்
அதாவது மார்ச் மாதம் தொடங்கியதில் இருந்து வெயில் குறைந்து பல மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. இதனால் பெரிய அளவில் வெயில் தெரியவில்லை.
இதை தவிர்த்து வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் வட கிழக்கு மாவட்டங்களில் இதற்கு நேர் மாறாக வெயில் கொளுத்தி எடுத்து வந்தது. சென்னையிலும் தற்போது வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. நேற்று கூட வேலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. இதனால் வெளியில் செல்லவே அச்சமடைந்துள்ளனர். இந்த சூழலில், தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஒருசில இடங்களில் வரும் 19 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. எனினும் வெப்பநிலையும் ஒருபுறம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு வாரத்திற்கான அப்டேட்
குறிப்பாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக வெப்பநிலை 38 - 39 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் முதல் முறையாக தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை மையம் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை மைய அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கடலோர ஆந்திர பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 13-04-2025 மற்றும் நாளை 14-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு:
* அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 13-04-2025 முதல் 17-04-2025 வரை: தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும்.
* இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 13-04-2025 முதல் 15-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
வெப்ப அலை முன்னெச்சரிக்கை
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம். மேலும் தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது.
* 14-04-2025 மற்றும் 15-04-2025 அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை கிளைமேட் எப்படி?
* சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (13-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
* சென்னையில் நாளை (14-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* தமிழக கடலோரப்பகுதிகள்:13-04-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14-04-2025 முதல் 17-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை.
* வங்கக்கடல் பகுதிகள் & அரபிக்கடல் பகுதிகள்: 13-04-2025 முதல் 17-04-2025 வரை: எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு (செமீ)
வேலூர் (வேலூர்), திருப்புவனம் (சிவகங்கை), மேலூர் (மதுரை), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி) தலா 3, அஞ்சட்டி (கிருஷ்ணகிரி), பெரியபட்டி (மதுரை), தானியமங்கலம் (மதுரை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) தலா 2, சிட்டம்பட்டி (மதுரை), செருமுள்ளி (நீலகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), காட்பாடி (வேலூர்), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), அன்னூர் (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), தேவாலா (நீலகிரி), ஓசூர் AWS (கிருஷ்ணகிரி), ஒசூர் (கிருஷ்ணகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி) தலா 1.
வெப்பநிலை நிலவரம்:
* அதிகபட்ச வெப்பநிலை :- வேலூர் : 40.1° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 21.5° செல்சியஸ்
* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-5° செல்சியஸ் அதிகரித்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3-5° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது.
* வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகள் மற்றும் கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36-40° செல்சியஸ், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 32-38° செல்சியஸ், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 32-36° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 20-28° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications