மக்களே உஷார்! தமிழ்நாட்டில் இன்று, நாளையும் வெப்ப அலை வீசும்.. தென் மாவட்டங்களுக்கு குளுகுளு அப்டேட்
சென்னை: தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என்றும், வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. வெயில் கொளுத்தி எடுக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தென் மாவட்டங்களை பொறுத்தவரை குமரியின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது. இதேபோல் கோவையில் லேசான மழை பெய்தது. எனினும் மற்ற மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது.

ஈரோட்டில் 109.4 டிகிரி: குறிப்பாக ஈரோட்டில் நேற்று 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்தியாவிலேயே 3வது இடமாக ஈரோட்டில் அதிக வெப்பம் பதிவானது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர், ஆந்திர மாநிலம் கடப்பா முதல் 2 இடங்களை பிடித்தது. புவனேஸ்வர், கடப்பாவில் 110.84 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நேற்று பதிவாகியது. இந்த நிலையில் இன்றும், நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் வெப்பநிலை 3 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும்: இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையின் படி, இன்று மற்றும் நாளை தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மறுநாள் 25 ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 26 முதல் 29 ஆம் தேதி வரை 4 நாட்கள் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3°-5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°-42° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° - 4° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 38°- 41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்: இன்று முதல் 27 ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை: இன்று மற்றும் நாளை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
சென்னையில் எப்படி?: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): சோலையார் (கோயம்புத்தூர்) 2, சிங்கம்புணரி (சிவகங்கை) 1.
அதிகபட்ச வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° 4° செல்சியஸ் அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 4° 5° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியது.
ஈரோட்டில் அதிகம்: அதிகபட்ச வெப்பநிலை 12 இடங்களில் 40.0° செ-க்கு மேல் பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை ஈரோட்டில் 43.0° செல்சியஸ், சேலத்தில் 41.6° செல்சியஸ், வேலூரில் 41.5° செல்சியஸ், தர்மபுரி & கரூர் பரமத்தியில் 41.2° செல்சியஸ், திருத்தணி & திருப்பத்தூரில் 40.8° செல்சியஸ், மதுரை விமான நிலையத்தில் 40.7° செல்சியஸ், திருச்சியில் 40.3° செல்சியஸ், மதுரையில் (நகரம்) 40.2° செல்சியஸ், கோயம்புத்தூர் (விமான நிலையம்) மற்றும் நாமக்கல்லில் 40.0° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35° 39° செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 23° -30° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37.3° செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.7° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications