எங்க இங்க இருந்த சூரியன காணோம்! காலையிலேயே கன்பியூஸான சென்னையன்ஸ்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன தகவல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கடுமையான பனிமூட்டம் நிலவி வரும் நிலையில் பல இடங்களில் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத நிலை இருக்கிறது. இந்த நிலையில், கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வட தமிழ்நாட்டில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் நாளையும் பனிமூட்டம் இருக்கும் என கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவடைந்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக பனிமூட்டமாக காணப்படுகிறது. குறிப்பாக வட மாவட்டங்கள், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே அதிகாலையில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

weather fog chennai

கடுமையான குளிருடன் பனிப் பொழிவு இருக்கும் நிலையில் வெப்ப நிலையும் கணிசமாக குறைந்து இருக்கிறது. அதிகாலையில் கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நான்காம் தேதி ஆன இன்று சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக செங்கல்பட்டில் இருந்து கடற்கரை மார்க்கமாக செல்லும் பயணிகள் மின்சார ரயில்கள் பத்து நிமிடங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சாரணைகளும் தாமதமாக இயக்கப்பட்டன.

இதனால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர். மேலும் சென்னை புறநகர் பகுதிகள், சோழிங்கநல்லூர், பெரும்பாக்கம், ஈசிஆர், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் பாதிப்படைந்தனர். காலையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னையில் தரையிறங்கக்கூடிய மற்றும் சென்னையில் இருந்து புறப்படும் 25க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் தரையிறங்க வேண்டிய ஆறு விமானங்கள் பெங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15-க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாகி உள்ளது.

காலை 8 மணி வரை கடுமையான பனிமூட்டம் இருந்ததால் சாலையில் பயணித்த வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே சென்றனர். சென்னை புறநகர் பகுதியில் மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் ஏற்பட்டது. இந்த நிலையில் வட தமிழ்நாட்டில் பனி மூட்டத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும், நாளையும் பனிமூட்டத்தை எதிர்பார்க்கலாம் என கூறியுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+