அதிகாலையில் வெளியே வந்து பார்த்தால் ஷாக்.. தமிழ்நாடு வானிலையில் செம மாற்றம்.. கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்றைய வானிலை எப்படி இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
அதன்படி, இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

24.12.2023: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
25.12.2023: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.12.2023: தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
27.12.2023 முதல் 28.12.2023 வரை: தமிழகத்தில் வருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மற்ற நாட்கள்: 29.12.2023: தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச
வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும். நகரின் ஒருசில பகுதிகளில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ஏதுமில்லை.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
23.12.2023: குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு லட்சதீவு பகுதிகளில்
சுறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.
சென்னை பனிமூட்டம்: சென்னையின் பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. காலையில் சாலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர். திங்கள் கிழமை வரை மிக கனமழை பெய்தது.
சென்னையை நோக்கி வரும் குளிர்ந்த காற்று சென்னையில் பனிப்பொழிவை அதிகரிக்கும். அதேபோல் குளிரை கூட்டும். பனிமூட்டமாக இதனால் இருக்கும். இதனால் சென்னையில் தற்போது ஊட்டி போன்ற வானிலை நிலவி வருகிறது.
வரும் சில நாட்களில் சென்னை உட்பட வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு குறைவு. லேசான மழையைத் தவிர மற்ற எல்லா பெரிய மழையும் அடுத்த வாரம் அல்லது அடுத்து10 நாட்களுக்கு சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்யாது. டிசம்பர் 25 முதல் 31 வரையிலான வாரத்திற்கான மழைப்பொழிவு பெரிதாக இருக்காது என்று வானிலை மையம் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications