விடாமல் கொட்டிய மழை! சென்னை, திருவள்ளூர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட தமிழகத்தில் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர் என 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த 5 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Schools rain

இந்த மாவட்டங்களில் காலை 7 மணி வரை கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சென்னை மீனம்பாக்கம் - 12 செ.மீ
சைதாப்பேட்டை - 12 செ.மீ
நுங்கம்பாக்கம் - 10.7 செ.மீ
அடையாறு - 10 செ.மீ
தரமணி - 9.5 செ.மீ
பாம்பன் - 5.5 செ.மீ

என மழை பதிவாகியிருக்கிறது. சென்னையில் விடிய விடிய கொட்டிய கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியிருக்கிறது. குறிப்பாக வடபழனி, தி.நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 7.30 மணி நிலவரப்படி மழைநீர் அதிக அளவில் தேங்கியிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

தி.நகர் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. இப்போது கனமழை காரணமாக வெள்ள நீர் தேங்கியிருப்பதால், பைக்குகளில் செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

முன்னதாக நேற்று வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில், இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+