புயல் பற்றி முன்பே எச்சரித்த பஞ்சாங்கம்.. அடுத்த புயல் எங்கே உருவாகுமாம் தெரியுமா?
சென்னை: மிக்ஜாம் புயல் தாக்கத்தில் இருந்தே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதி மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் அடுத்த புயல் வரப்போகிறது என்று அச்சுறுத்தி வருகின்றனர். கார்த்திகையில் கடுமையான புயல் வீசும் என்று தமிழ் பஞ்சாங்கம் முன்பே எச்சரித்திருந்தது.
புரட்டிப்போட்ட புயல்: மிக்ஜாம் புயலால் சென்னையே தலைகீழாக மாறியுள்ளது. அதன் பாதிப்பு மக்களின் வாழ்வாதாரங்களை நிலைகுலைய செய்துள்ளது. வடசென்னை, தென் சென்னை, சென்னை புறநகர் பகுதிகளும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களும் தண்ணீர் தேசமாக மாறியுள்ளது. பலர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். மழைநீர் வடியாததால் பலர் தங்களின் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

மிக்ஜாம்: புயல் காரணமாக ஏராளமான பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளதால் மாநில அரசு மத்திய அரசிடம் ரூ.5, 060 கோடி இழப்பீடு தொகை கேட்டுள்ளது. இதுகுறித்த கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ளார். இவ்வாறு மிக்ஜாம் புயலில் இருந்து மீளாமல் சென்னை தத்தளித்து வருகிறது. அதற்குள் அடுத்த மழையை சென்னையும் புறநகர் பகுதிகளும் எதிர் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை.
சென்னைக்கு ஆபத்தா: இந்த நிலையில் சென்னையை மீண்டும் ஒரு புயல் தாக்கும் என்ற செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என்று வானிலை ஆய்வாளர்கள் பதிவிட்டுள்ளனர். இதுபோன்ற செய்திகளை நம்ப வேண்டாம். 10 ஆம் தேதி அரபிக் கடலில் சில வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழ்த்த தாழ்வு பகுதி உருவாகலாம். அது இந்திய கடற்கரையை விட்டு நகர்ந்து சென்று விடும். இதனால் சென்னைக்கு ஆபத்து இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
பஞ்சாங்கம் கணிப்பு: இதனிடையே பஞ்சாங்கத்தில் கடலூருக்கு கிழக்கே புதிய புயல் சின்னம் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் 12ஆம் தேதி அமாவாசை நாளில் பாண்டிச்சேரிக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் காற்றுடன் மழை பெய்யக்கூடும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. 14ஆம் தேதியன்று நெல்லூருக்கு தென்கிழக்கே புயல் வீசக்கூடும் எனவும் சுத்த வாக்கிய சர்வ முகூர்த்த பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது.
குட்டி புயல்: டிசம்பர் 21ஆம் தேதியனன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் எனவும் இலங்கைக்கு கிழக்கே குட்டி புயல் உருவாகும் எனவும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் 23ஆம் தேதியன்று கடலூரில் பயங்கர சூறாவளி காற்று வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 25ஆம் தேதி விடிய விடிய மழை பெய்யும் என்றும் அரசியல் தலைவருக்கு கெண்டம் என்றும் பஞ்சாங்கத்தில் கணித்து எழுதப்பட்டுள்ளது. டிசம்பர் 29ஆம் தேதியன்று கர்ப்போட்ட காலம் ஆரம்பமாகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications