வெயிலுக்கு குட்பை.. கொட்டப்போகுது மழை.. சென்னை உள்பட 6 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்.. வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்துக்கு இனி மழை வெளுக்க வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில், இன்று முதல் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், தென்காசி, கோவை, நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல் தரைக்காற்று 50 கிமீ வீசக்கூடும் என்றும், மீனவர்களுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகளை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் வெயில் அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கிறது. எனினும் மாலை நேரங்களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.

சென்னை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என ஆரஞ்சு நிற அலர்டும் விடப்பட்டுள்ளது.
இதேபோன்று நாளை மறுநாள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 18 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தென்காசி, தேனி, கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 22 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோன்று தரைக்காற்று 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications