அடுத்த 2 மணி நேரம்.. இடைவிடாமல் வெளுக்கப்போகும் மழை.. சென்னை டூ தென்காசி வரை 8 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கும், விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி எடுத்தது. காலை முதல் மதியம் வரை வெயில் சுட்டெரித்தது. எனினும் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக நேற்று கனமழை சென்னையில் பெய்த நிலையில் இன்று காலையிலும் ஒரு சில இடங்களில் லேசான மழை கொட்டியது.

அதன்பிறகு பெரிய அளவில் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் சென்னை முதல் தென்காசி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் அதாவது இன்று இரவு 7 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கனமழைக்கும், தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் என 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
முன்னதாக வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று 31-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
01-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னது. ன் கூடிய சூறாவளி காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 02-09-2025 முதல் 06-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று, நாளை மழைக்கு சான்ஸ்
இன்று (31-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (01-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* தமிழக கடலோரப்பகுதிகள்: 31-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 01-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழக கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 02-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 03-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வட தமிழக கடல்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
* 04-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
* மண்டலம் 02 D15 மணலி (சென்னை) 27, மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை) 23, மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை) 26.
* மண்டலம் 07 கொரட்டூர் (W86) (சென்னை) 18, மண்டலம் 07 கொரட்டூர் (W84) (சென்னை). மண்டலம் 02 மணாலி நியூ டவுன் (W15) (சென்னை) தலா 16, எண்ணூர் AWS (திருவள்ளூர்) 15. மண்டலம் 01 கத்திவாக்கம் (சென்னை), மண்டலம் 02 மணாலி (சென்னை) 14 தலா, மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை) 13, மண்டலம் 07 அயப்பாக்கம் (சென்னை) 12,
* மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), அம்பத்தூர் (Rev) (திருவள்ளூர்), மண்டலம் 05 பாரி முனை (சென்னை), மண்டலம் 11 நெற்குன்றம் தலா 11.
* CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்), மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை) தலா 10,
* மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), மண்டலம் 05 காசிமேடு (சென்னை) தலா 9 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications