தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்
சென்னை: வளிமண்டல சுழற்றி, காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் இன்று வெயில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும் நாளை தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறி உள்ளது.
தென் மேற்கு பருவமழை இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் தற்போதே மழை வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று திடீரென கிளைமேட் மாறியுள்ளது. மதியம் வரை வெயில் சுட்டெரித்த நிலையில் மாலையில் திடீரென வான்னம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த சூழலில் தான் இன்று தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்
தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் துவங்கக்கூடும். சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதே போன்று சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.
சுமார் 1.5 கிமீ உயரம் வரை கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
நாளை எங்கெல்லாம் மழை பெய்யும்?
நாளை செவ்வாய்க்கிழமை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும்.
சென்னையில் கிளைமேட் எப்படி?
சென்னையில் இன்று (01-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படக்கூடும்.
சென்னையில் நாளை (02-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications