Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேய்மழை கொட்டப் போகுது.. தமிழ்நாட்டைச் சுத்துப் போட்ட மேகங்கள்! கடலூருக்கு தான் ஹை அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்று நாட்களுக்கு சென்னையில் மிக கனமழை பொழிய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடலூருக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிப்பு 1077, 04142 -220 700 எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக வலுப்பெற்றுள்ளது. இது வரும்நேரங்களில் மேலும் வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் தாக்கத்தால், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் மழை தீவிரமடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

weather rainfall warning IMD

மழை எச்சரிக்கை

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை (Orange Alert) விடுத்துள்ளது. இது, அந்த பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை குறிக்கிறது. இதனால், நகராட்சி, பேரிடர் மேலாண்மை துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளும் முழு எச்சரிக்கையுடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

கடலூர் ரெட் அலர்ட்

மேலும், கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் (Red Alert) அறிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கும் அதிக மழை பதிவானால், அது சிவப்பு எச்சரிக்கைக்குரிய அளவாக கருதப்படுகிறது. இதன் அடிப்படையில், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நிலைமைக்கு துரிதமான நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அவசரகால எண்கள்

அதில், 24 மணி நேரமும் செயல்படும் அவசரகால கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் எந்தவொரு அவசரநிலையிலும் 1077 அல்லது 04142-220700 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் மீட்பு மற்றும் உதவித் திட்டங்கள் மேற்கொள்ள, அவசர உதவிக் குழுக்கள் தயாராக உள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வானிலை ஆய்வு மையம்

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட காலநிலை மதிப்பீட்டின்படி, அக்டோபர் 22 ஆம் தேதி மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக கனமழை

அக்டோபர் 23 ஆம் தேதி சென்னையிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் ஆரஞ்ச் எச்சரிக்கை தொடரும். இதன் பொருள், அந்த பகுதிகளில் மிக கனமழை ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதைக் குறிக்கிறது. இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, "இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறும் சாத்தியம் மிகக் குறைவு. காரணம், இது தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ளது. கடற்கரைக்கு மிக அருகில் இருப்பதால், புயலாக தீவிரமடைய போதுமான இடமும் நேரமும் கிடையாது. எனினும், இதன் காரணமாக கடலோர பகுதிகளில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் வாய்ப்பு இருப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்" என எச்சரித்துள்ளனர்.

மழை எச்சரிக்கை

இதனால், சென்னை மற்றும் கடலூர் உட்பட பல மாவட்டங்களில் உள்ளூர் நிர்வாகங்கள் மழை எச்சரிக்கையுடன் முழு தயார் நிலையில் உள்ளன. மின்சாரம், சாலைத்துறை, மருத்துவம், காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+