Heavy Rain: அடுத்த 1 மணி நேரம்.. அடித்து பெய்யப் போகும் மழை.. சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு அலர்ட்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்திற்கு, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் இருந்தே சென்னையில் மழை கொட்டி வரும் நிலையில் இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இந்த நிலையில் தான் அடுத்த ஒரு மணி நேரத்திற்கும் மழை தொடரும் என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டங்கள், வட மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. சென்னை எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி, தி நகர், தாம்பரம், குரோம்பேட்டை என பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

அடுத்த 1 மணி நேரம்
இன்று காலையிலும் மழை தொடர்ந்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காணப்பட்டது. இந்த நிலையில் அடுத்த 1 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
"தமிழகத்தில் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு அதாவது இன்று காலை 10 மணி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தற்போது வரை சென்னையில் மட்டும் 52. செமீ மழை பெய்துள்ளது.
இயல்பை விட அதிக மழை
இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலக்கட்டத்தில் 36 செமீ அளவு தான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயல்பை விட 35 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்று முதல் வரும் 25 ஆம் தேதி வரை வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுவை, காரைக்காலிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று (20-09-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மழை அளவு:
* விழுப்புரம் (விழுப்புரம்) 19, திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 17.
* திருப்பத்தூர் AWS (திருப்பத்தூர்), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்), RSCL-2 கெடார் (விழுப்புரம்) தலா 16,
* வாணியம்பாடி (திருப்பத்தூர்) 15,
* தாலுகா அலுவலகம் திருப்பத்தூர் (திருப்பத்தூர்) 14,
* ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), வனமாதேவி (கடலூர்), பண்ருட்டி (கடலூர்) தலா 13,
* RSCL-2 வளவனூர் (விழுப்புரம்) 12.
* BASL மணம்பூண்டி (விழுப்புரம்), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர்), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), BASL முகையூர் (விழுப்புரம்), ஆம்பூர் (திருப்பத்தூர்). RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்) தலா 11.
* மண்டலம் 15 உத்தண்டி (சென்னை), பத்துக்கண்ணு (புதுச்சேரி), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) தலா 10 செமீ மழை பெய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications