இன்னைக்கும் சம்பவம் தான்.. ‘இந்த’ ஊர்க்காரங்க குடையோடு தான் வெளியே போகனும்! மெட் கொடுத்த வார்னிங்
சென்னை: இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூறிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாத இறுதி வரை பெய்த வடகிழக்கு பருவமழை, நவம்பர் மாதம் தொடங்கியதிலிருந்து சற்று மந்தமான நிலையில் தான் காணப்படுகிறது. சில மாவட்டங்களில் வெப்பச்சலன மழை சில மணி நேரம் பெய்தாலும், பருவமழை சார்ந்த தொடர் மழை பெரும்பாலும் காணப்படவில்லை.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மழைக்காக காத்திருந்தனர். இந்நிலையில், மீண்டும் வடகிழக்கு பருவமழை சுறுசுறுப்பாகும் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. தென் சீனக் கடலில் உருவாகியுள்ள அழுத்த நிலை மற்றும் கிழக்கிலிருந்து வீசும் காற்று, வட இந்தியாவிலிருந்து தெற்கே இறங்கும் குளிர்ந்த காற்றுடன் இணைந்து, வடகிழக்கு காற்றாக தமிழகத்தை நோக்கி நகர்கிறது.
வானிலை முன்னறிவிப்பு
இதனால், வரும் நாட்களில், கடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, குடலூர் உள்ளிட்ட இடங்களிலும், காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு அதிகம். மேலும் தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் சில நேரங்களில் கனமழை பொழியக்கூடும் என்கின்றனர். வானிலை ஆய்வாளர்களின் தகவலின்படி, நாளை முதல் வடகிழக்கு காற்று தமிழகத்தில் தீவிரமடையலாம் என சொல்லப்படுகிறது.
தமிழக மழை
இந்நிலையில், இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று மழைக்கு வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூறிய மழை பெய்யும் எனவும் கூறியுள்ளது. மேலும், நாளை முதல் 17ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்." என கூறப்பட்டுள்ளது.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications