கிழிகிழின்னு பிரிச்சு மேயப்போகும் கனமழை.. 9 மாவட்டங்களில் விட்டு விளாசும்! சென்னைக்கும் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்காசி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 01.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

02.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 03.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 04.11.2023 மற்றும் 05.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தேனாம்பேட்டை (சென்னை), நாகப்பட்டினம், ராமநாதபுரம் KVK AWS (ராமநாதபுரம்), மீ மாத்தூர் (கடலூர்), மண்டலம் 10 கோடம்பாக்கம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), குருங்குளம் (தஞ்சாவூர்), செங்கல்பட்டு, மகாபலிபுரம் (செங்கல்பட்டு), விராலிமலை (புதுக்கோட்டை) தலா 5, KCS மில்-1 அரியலூர் (கள்ளக்குறிச்சி), வட்டமலை நீர்த்தேக்கம் (திருப்பூர்), தழுதலை (பெரம்பலூர்), கடலாடி (ராமநாதபுரம்), லால்பேட்டை (கடலூர்), பெருந்துறை (ஈரோடு), மணப்பாறை (திருச்சிராப்பள்ளி), காரியாப்பட்டி (விருதுநகர்), மண்டலம் 11 U32 மதுரவாயல் (சென்னை), ஈரோடு (ஈரோடு), ஆயிக்குடி (தென்காசி) தலா 4, மண்டலம் 06 D65 கொளத்தூர் (சென்னை), RSCL-3 செம்மேடு (விழுப்புரம்), மணல்மேடு (மயிலாடுதுறை), சிதம்பரம் AWS (கடலூர்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), ராமநாதபுரம் (ராமநாதபுரம்), தலைஞாயிறு (நாகப்பட்டினம்), பரங்கிப்பேட்டை (கடலூர்), திருச்செங்கோடு (நாமக்கல்), மண்டலம் 06 திரு.வி.க நகர் (சென்னை), ஆற்காடு (ராணிப்பேட்டை), சாத்தியார் (மதுரை), கொத்தவாச்சேரி (கடலூர்), தென்காசி, செம்பனார்கோயில் பொதுப்பணித்துறை (மயிலாடுதுறை), பேரையூர் (மதுரை), சங்கரி துர்க்கம் (சேலம்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), வானூர் (விழுப்புரம்), அம்பத்தூர் (சென்னை), லக்கூர் (கடலூர்), வேப்பூர் (கடலூர்), திருச்செந்தூர் (தூத்துக்குடி), மேட்டூர் (சேலம்), BASL மணம்பூண்டி (விழுப்புரம்), KCS மில்-1 கடவனூர் (கள்ளக்குறிச்சி), கொள்ளிடம் (மயிலாடுதுறை), அண்ணாமலை நகர் (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), தென்பரநாடு (திருச்சிராப்பள்ளி), எம்ஜிஆர் நகர் (சென்னை), தொண்டி (ராமநாதபுரம்), கே.எம்.கோயில் (கடலூர்), க.பரமத்தி (கரூர்), தொழுதூர் (கடலூர்), கோவில்பட்டி (தூத்துக்குடி), வாலாஜா (ராணிப்பேட்டை), மயிலாடுதுறை (மயிலாடுதுறை), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), காட்டுமயிலூர் (கடலூர்), காயல்பட்டினம் (தூத்துக்குடி), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), RSCL வல்லம் (விழுப்புரம்), முசிறி (திருச்சிராப்பள்ளி) தலா 3, பூந்தமல்லி (திருவள்ளூர்), வனமாதேவி (கடலூர்), அம்மாபேட்டை (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), சென்னை நுங்கம்பாக்கம், வீரகனூர் (சேலம்), பஞ்சப்பட்டி (கரூர்), பாபநாசம் (திருநெல்வேலி), விருதுநகர் AWS (விருதுநகர்), மண்டலம் 08 அண்ணாநகர் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), ராணிப்பேட்டை, BASL முகையூர் (விழுப்புரம்), மூலனூர் (திருப்பூர்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), அமராவதி அணை (திருப்பூர்), திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), திருக்குவளை (நாகப்பட்டினம்), செந்துறை (அரியலூர்), குளித்தலை (கரூர்), மண்டலம் 13 U39 அடையார் (சென்னை), வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), அறந்தாங்கி (புதுக்கோட்டை), அன்னவாசல் (புதுக்கோட்டை), திருச்செந்தூர் AWS (தூத்துக்குடி), சென்னை (N) AWS (சென்னை), பயணியர் விடுதி சிவகங்கை, திருவாரூர், இலுப்பூர் (புதுக்கோட்டை), SRC குடிதாங்கி (கடலூர்), YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 08 மலர் காலனி (சென்னை), திருமங்கலம் (மதுரை), பவானி (ஈரோடு), சிங்கம்புணரி (சிவகங்கை), குறிஞ்சிப்பாடி (கடலூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), மண்டலம் 07 அம்பத்தூர் (சென்னை), திருப்பத்தூர் (சிவகங்கை), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி), குமாரபாளையம் (நாமக்கல்), நாவலூர் கோட்டப்பட்டு (திருச்சிராப்பள்ளி), பாடலூர் (பெரம்பலூர்), நத்தம் (திண்டுக்கல்), DSCL தியாகதுர்க்கம் (கள்ளக்குறிச்சி), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை), கடலூர், மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), கரம்பக்குடி (புதுக்கோட்டை), திருவிடைமருதூர் (தஞ்சாவூர்), காரைக்கால், திருமயம் (புதுக்கோட்டை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), மண்டபம் (ராமநாதபுரம்), ஆயின்குடி (புதுக்கோட்டை), கொட்டாரம் (கன்னியாகுமரி), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), RSCL-2 வளவனூர் (விழுப்புரம்), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), மண்டலம் 13 அடையார் சுற்றுச்சூழல் பூங்கா (சென்னை), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), அம்முண்டி (வேலூர்) தலா 2, மதுரை விமானநிலையம் (மதுரை), கடலூர் ஆட்சியர் அலுவலகம், கேளம்பாக்கம் (செங்கல்பட்டு), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), மன்னார்குடி (திருவாரூர்), மண்டலம் 07 U18 D81 வானகரம் (சென்னை), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), பெரம்பலூர், குடியாத்தம் (வேலூர்), மண்டலம் 03 புழல் (சென்னை), RSCL-2 கோலியனூர் (விழுப்புரம்), பண்ருட்டி (கடலூர்), கோடியக்கரை (மயிலாடுதுறை), ஒரத்தநாடு (தஞ்சாவூர்), மாஞ்சோலை (திருநெல்வேலி), கொடைக்கானல் (திண்டுக்கல்), திருச்சிராப்பள்ளி விமானநிலையம், திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்), புவனகிரி (கடலூர்), காரைக்குடி (சிவகங்கை), செய்யார் (திருவண்ணாமலை), பேராவூரணி (தஞ்சாவூர்), கள்ளக்குறிச்சி, சிதம்பரம் (கடலூர்), கோவிலங்குளம் (விருதுநகர்), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), வடகுத்து (கடலூர்), ராமநதி அணைப் பகுதி (தென்காசி), RSCL-2 கெடார் (விழுப்புரம்), விழுப்புரம், வி.களத்தூர் (பெரம்பலூர்), லப்பைக்குடிகாடு (பெரம்பலூர்), பள்ளமோர்குளம் (ராமநாதபுரம்), செங்கோட்டை (தென்காசி), வட்டானம் (ராமநாதபுரம்), லால்குடி (திருச்சிராப்பள்ளி), மஞ்சளாறு (தஞ்சாவூர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), திருத்தணி (திருவள்ளூர்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), தர்மபுரி PTO (தர்மபுரி), தலைவாசல் (சேலம்), பெலாந்துறை (கடலூர்), பொன்னையார் அணை (திருச்சிராப்பள்ளி), கொரட்டூர் (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), அரூர் (தர்மபுரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), செஞ்சி (விழுப்புரம்), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), எறையூர் (பெரம்பலூர்), வெம்பக்கோட்டை (விருதுநகர்), சங்கரன்கோயில் (தென்காசி), அரியலூர் PTO (அரியலூர்), ஆண்டிபட்டி (மதுரை), கீழ் அணைக்கட்டு (தஞ்சாவூர்), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), நாகுடி (புதுக்கோட்டை), மேட்டுப்பட்டி (மதுரை), மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), மண்டலம்4 U41 பெருங்குடி (சென்னை), மண்டலம்5 சோழிங்கநல்லூர் (சென்னை), எச்சன்விடுதி (தஞ்சாவூர்), கல்லணை (தஞ்சாவூர்), அவலாஞ்சி (நீலகிரி), குண்டாறு அணை (தென்காசி), கடல்குடி (தூத்துக்குடி), RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்), ஊத்து (திருநெல்வேலி), திருச்சிராப்பள்ளி சந்திப்பு, திருப்போரூர் (செங்கல்பட்டு), புதுக்கோட்டை, காக்காச்சி (திருநெல்வேலி), கும்பகோணம் (தஞ்சாவூர்), திருவூர் AWS (திருவள்ளூர்), RSCL-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்), அண்ணா பல்கலை ARG (சென்னை), சத்யபாமா பல்கலை ARG (காஞ்சிபுரம்), மண்டலம்5 உத்தண்டி (சென்னை), நெய்வாசல் தென்பாதி (தஞ்சாவூர்), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பூதலூர் (தஞ்சாவூர்), கவுந்தப்பாடி (ஈரோடு), அரிமளம் (புதுக்கோட்டை), மேலாலத்தூர் (வேலூர்), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), கெத்தை (நீலகிரி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), தம்மம்பட்டி (சேலம்), உப்பாறு அணை (திருப்பூர்), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), மணமேல்குடி (புதுக்கோட்டை), பெரியபட்டி (மதுரை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), சேலம், கல்லக்குடி (திருச்சிராப்பள்ளி), செய்யூர் (செங்கல்பட்டு), நிலக்கோட்டை (சென்னை), ஆரணி (திருவண்ணாமலை), நாலுமுக்கு (திருநெல்வேலி), குலசேகரப்பட்டினம் (தூத்துக்குடி), வலங்கைமான் (திருவாரூர்), RSCL-2 நேமூர் (விழுப்புரம்), பாம்பன் (ராமநாதபுரம்), கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), இளையங்குடி (சிவகங்கை), மண்டலம் 05 GCC (சென்னை), DSCL கீழ்படி (கள்ளக்குறிச்சி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), ஆண்டிபட்டி (தேனி), செட்டிகுளம் (பெரம்பலூர்), காரையூர் (புதுக்கோட்டை), வாலிநோக்கம் (ராமநாதபுரம்), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), திண்டிவனம் (விழுப்புரம்), தஞ்சாவூர், கோடநாடு (நீலகிரி), எமரால்டு (நீலகிரி), கிருஷ்ணபுரம் (பெரம்பலூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications