திரண்டு வந்த மேகம்.. அடுத்த 3 நாட்களுக்கு.. மழை பிச்சு எடுக்க போகுது! எங்கெல்லாம் தெரியுமா? வார்னிங்
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசியில் இன்று இரவு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள கணிப்பில், 05.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி. தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.09.2023: தமிழ்நாடு. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
08.09.2023 & 09.09.202: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
11.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): பூந்தமல்லி (திருவள்ளூர்) 11. செங்கம் (திருவண்ணாமலை) 10. ஆர்.கே.பேட்டை (திருவள்ளூர்), ஆர்.கே.பேட்டை ARG (திருவள்ளூர்), வானூர் (விழுப்புரம்) தலா 9, வெங்கூர் (கள்ளக்குறிச்சி) 8, திருத்தணி PTO (திருவள்ளூர்), தேவாலா (நீலகிரி), கெட்டி (நீலகிரி), போளூர் (திருவண்ணாமலை), ஆர்எஸ்சிஎல்-2 கேதர் (விழுப்புரம்), நெடுங்கல் (கிருஷ்ணகிரி), திருவாடானை (ராமநாதபுரம்) தலா 7, சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), ஒட்டன்சத்திரம் (திண்டுக்கல்), ஆர்எஸ்சிஎல்-2 முண்டியம்பாக்கம் (விழுப்புரம்) தலா 6, வைகை அணை (தேனி), உசிலம்பட்டி (மதுரை), திருவண்ணாமலை, நத்தம் (திண்டுக்கல்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), சென்னிமலை (ஈரோடு), கீழ்பென்னாத்தூர் (திருவண்ணாமலை). கோவில்பட்டி (திருச்சி), நந்தியார். கீழ் கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), பொன்னமராவதி (புதுக்கோட்டை), கோவிலங்குளம் (விருதுநகர்), கேசிஎஸ் மில்-1 கடவனூர் (கடவனூர்), மதுரை விமான நிலையம் தலா 5, அருப்புக்கோட்டை KVK AW5 (விருதுநகர்). கீரனூர். (புதுக்கோட்டை), மேலூர் (மதுரை). திருத்தணி (திருவள்ளூர்), திருவாலங்காடு (திருவள்ளூர்), மைலம்பட்டி (கரூர்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), பாலவீதி (கரூர்), விழுப்புரம், தூத்துக்குடி, பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), டிஎஸ்சிஎல் மாதம்பூண்டி (கள்ளக்குறிச்சி), விரகனூர் அணை (மதுரை). கொடைக்கானல் படகு குழாம் ( திண்டுக்கல்), விருதுநகர் (விருதுநகர்), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு) தலா 4. ஏழுமலை (மதுரை), ஆர்எஸ்சிஎல்-2 நெமூர் (விழுப்புரம்), இடையபட்டி (மதுரை), பொன்னை அணை (வேலூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), துவாக்குடி (திருச்சி), ஐம்புகுட்டப்பட்டி (கிருஷ்ணகிரி), பஞ்சப்பட்டி (கரூர்), ஆர்எஸ்சிஎல்-3 அவலூர்பேட்டை (விழுப்புரம்), செம்பரம்பாக்கம் ARG (திருவள்ளூர்), ஆர்எஸ்சிஎல்-2 சூரப்பட்டு (விழுப்புரம்), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), தாம்பரம் (செங்கல்பட்டு), இலுப்பூர் (புதுக்கோட்டை), பாரூர் (கிருஷ்ணகிரி), ஆர்எஸ்சிஎல்-3 ஆனந்தபுரம் (விழுப்புரம்), புள்ளம்பாடி (திருச்சி), பாம்பார் அணை (கிருஷ்ணகிரி), ஊத்துக்குளி (திருப்பூர்), வேலூர், திருவள்ளூர், பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி), காரியாபட்டி (விருதுநகர்), கரூர், ஆர்எஸ்சிஎல்-3 வளத்தி (விழுப்புரம்), மணப்பாறை (திருச்சி), ஊத்தங்கரை (கிருஷ்ணகிரி), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்) தலா 3, KRP அணை (கிருஷ்ணகிரி), ஆர்எஸ்சிஎல்-2 வளவனூர் (விழுப்புரம்), ஆர்எஸ்சிஎல்-2 கஞ்சனூர் (விழுப்புரம்), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), கிண்ணக்கொரை ஸ்ரீலகிரி), காட்பாடி (வேலூர்), விருதுநகர் AWS (விருதுநகர்), ஆர்எஸ்சிஎல்-3 செம்மேடு (விழுப்புரம்), மதுரை வடக்கு, மதுரை நகரம், காரையூர் (புதுக்கோட்டை), ஆர்எஸ்சிஎல்-2 கோலியனூர் (விழுப்புரம்), ராஜபாளையம் (விருதுநகர்), உதகமண்டலம் (நீலகிரி), கோமுகி அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி), திருப்பத்தூர் PTO, வொர்த் எஸ்டேட் (நிலகிரி), உடையாளிபட்டி (புதுக்கோட்டை). அன்னவாசல் (புதுக்கோட்டை), அடையாமடை (கன்னியாகுமரி), மில்-1 மூங்கில்துறை (கள்ளக்குறிச்சி), சோலையார் (கோயம்புத்தூர்). பூண்டி (திருவள்ளூர்), மேலாளத்தூர் (வேலூர்), டிஎஸ்சிஎல் தியாகதுர்கம் (கள்ளக்குறிச்சி), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), இளையங்குடி (சிவகங்கை). சேத்பேட்டை (திருவண்ணாமலை), மேட்டுப்பட்டி (மதுரை), சத்தியார் (மதுரை), பாலமோர் (கன்னியாகுமரி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்), சென்னை விமான நிலையம், கல்லக்குடி (திருச்சி), ஆலந்தூர் (சென்னை), திருர் KVK AWS (இருவள்ளூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), கொரட்டூர் (திருவள்ளூர்), குந்தா பாலம் (நீலகிரி), பாப்பிரெட்டிப்பட்டி (தருமபுரி), மருங்காபுரி (திருச்சி). சோழிங்கநல்லூர் (சென்னை), குன்னூர் (நீலகிரி), மணிமுத்தாறு அணைக்கட்டு (கள்ளக்குறிச்சி). விராலிமலை (புதுக்கோட்டை), மீனம்பாக்கம் ISRO AWS (சென்னை) தலா 2.
வந்தவாசி (திருவண்ணாமலை), டிஎஸ்சிஎல் எறையூர் (கள்ளக்குறிச்சி), திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கோத்தகிரி (நீலகிரி), கல்லிக்குடி (மதுரை), பிஎஸ்சிஎல் மணம்பூண்டி (விழுப்புரம்), தர்மபுரி PTO, அருப்புக்கோட்டை (விருதுநகர்). கோவில்பட்டி AwS (தூத்துக்குடி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி). தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), மேட்டூர் (சேலம்), நீலகிரி), சின்னகள்ளார். (கோயம்புத்தூர்), பர்லியார் (நீலகிரி), பாலக்கோடு (தருமபுரி). கந்தர்வகோட்டை (புதுக்கோட்டை), வத்தலை அணைக்கட்டு (திருச்சி), அரியலூர் முகாம் பகுதி (கள்ளக்குறிச்சி), கிளாசெருவை (கடலூர்), பெரியபட்டி (மதுரை), குன்னூர் PTO (நீலகிரி), கல்லந்திரி (மதுரை), இரணியல் ( கன்னியாகுமரி), புலிவலம் (திருச்சி), கொடநாடு (நீலகிரி), டி.எஸ்.சி.எல். விருகாவூர் (கள்ளக்குறிச்சி), பொன்னனியார் அணை (திருச்சி), திருமங்கலம் (மதுரை), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்). ஏற்காடு (சேலம்). வால்பாறை (கோயம்புத்தூர்), அண்ணா PAP பல்கலைக்கழகம் (சென்னை), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்),), மஞ்சளார் (தேனி), புடலூர் (தஞ்சாவூர்), கள்ளக்குறிச்சி, டிஎஸ்சிஎல் கலயநல்லூர் (கள்ளக்குறிச்சி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), பெருங்குடி (சென்னை), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), அடையாறு (சென்னை), VIT சென்னை AWS (செங்கல்பட்டு), NIOT பள்ளிக்கரணை ARG (சென்னை) தலா 1.












Click it and Unblock the Notifications