தமிழ்நாட்டிலே டாப்.. சென்னையில் கொட்டிய கனமழை! நுங்கம்பாக்கத்தில் 64.5 மிமீ! மாநகரமே மலர்ந்துடுச்சு
சென்னை: சென்னையில் நேற்று பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவாகி இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். எந்தெந்த இடங்களில் எவ்வளவு மழை பெய்தது என்ற விபரத்தை பார்ப்போம்.
நேற்று தமிழ்நாட்டின் பல இடங்களில் விட்டுவிட்டும், சில இடங்கள் தொடர் மழையும் கொட்டித்தீர்த்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் நல்ல மழை பெய்து உள்ளது. நேற்று காலை 8.30 மணி முதல் இன்று அதிகாலை 5.30 மணி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் 64.5 மிமீ மழை கொட்டித் தீர்த்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், "கண்காணிப்பகங்களில் நுங்கம்பாக்கம்- 64.5, மீனம்பாக்கம்- 19.3, கடலூர்- 2.0, தஞ்சாவூர்- 1.0, காரைக்கால்- 27.0, நாகப்பட்டினம்- 6.0, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 0.5, புதுச்சேரி - 0.9.
AWS/ARG: செங்கல்பட்டு விஐடி - சென்னை - 1.5, சென்னை எண்ணூர் துறைமுகம் - 58.0, சென்னை மாதவரம் - 4.0, கிருஷ்ணகிரி பையூர் - 2.5, தஞ்சாவூர் அதிராமப்பட்டினம் - 0.5, திருவள்ளூர் திரூர்- 16.5, செங்கல்பட்டு மேற்கு தாம்பரம்_SIT- 1.0, சென்னை அண்ணா பல்கலைக்கழகம்- 6.5, சென்னை நியாட் - பள்ளிக்கரணை- 12.3, சென்னை தரமணி - 24.5, சென்னை யம்சாநந்தனம் - 21.5, காஞ்சிபுரம் செம்பரம்பாக்கம் - 8.5, காஞ்சிபுரம் இந்துஸ்தான் பல்கலைக்கழகம்- 18.0, காஞ்சிபுரம் எல்மோயிஸ் கொலப்பாக்கம் - 15.5, காஞ்சிபுரம் சத்தியபாமா பல்கலைக்கழகம் - 12.5, திருவள்ளூர் குட் வில் பள்ளி வில்லிவாக்கம் - 36.5, திருவள்ளூர் பூந்தமல்லி - 12.0, திருவள்ளூர் புழல் - 33.5." என்று குறிப்பிட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை, "எண்ணூர் துறைமுகம் - 59.0, சென்னை நுங்கம்பாக்கம் - 64.5, புழல் - 34.5, தண்டையார்பேட்டை - 69.5, ராயபுரம் - 63.9, மணலி - 62.7, அண்ணா நகர் - 56.1, உத்தண்டி - 34.8, கத்திவாக்கம் - 47.4, திருவிக நகர் -51.0, ஐஸ் ஹவுஸ் - 62.3" என்ற அளவில் கனமழை பெய்து இருக்கிறது.
நேற்று மழை தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்ட முன்னறிவிப்பில், "சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications