பகலில் வெயில்.. மாலையில் ஜில்லென பெய்த மழை.. சட்டென்று மாறிய வானிலையால் சென்னைவாசிகள் மகிழ்ச்சி
சென்னை: பகலில் வெயில் சுட்டெரித்த நிலையில் சென்னையில் பல பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே சென்னையில் மாலை நேரங்களில் ஜில்லென மழை பெய்வதால் இரவில் குளிர் காற்று வீசுவதாவ் பருவநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாத பிற்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தென்மேற்கு பருவமழையை பொறுத்த வரையில் இந்த ஆண்டு இயல்பான மழை குறைவாகவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் பகல் நேரங்களில் வெயிலடித்தாலும் மாலை நேரங்களிலும் இரவு நேரங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் காலை முதலே வெயில் சுட்டெரித்தது. மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்தது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிண்டி, கத்திப்பாரா, ஆலந்தூர், குரோம்பேட்டை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. மயிலாப்பூரில் குளிர் காற்று வீசிய நிலையில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து மூன்று நாட்களாக சென்னையில் பல பகுதிகளில் மாலை நேரத்திலும் இரவு நேரத்திலும் மழை பெய்து வருவதால் சென்னையில் வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. இன்னும் சில வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்னோட்டமாக சென்னையில் மழை பெய்து வருகிறது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications