அடுத்த 24 - 36 மணி நேரங்களில்.. சென்னையில் நடக்க போகும் சூப்பர் சம்பவம்.. வானிலை அமைப்பு குட்நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்து மழை பெய்யும் நிலையில் சென்னை வானிலை தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், அடுத்த 24 முதல் 36 மணிநேரம் வரை சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் பெய்ய போகும் மழை கன மழையாகவும் இருக்கலாம். காற்று சுழற்சியின் தாக்கத்தால் தென் தமிழகம் மற்றும் கேரளாவில் இன்று பல இடங்களில் கனமழை பெய்யக்கூடும். என்று சென்னை ரெயின்ஸ் அமைப்பு கூறியுள்ளது.

Heavy rain in Chennai for the next 24-36 hours window says Chennai Rain Group

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

இந்திய வானிலை மைய அறிக்கைபடி, தென்தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

கோவிலங்குளம் (விருதுநகர்), அருப்புக்கோட்டை KVK AWS (விருதுநகர்) தலா 8, உடுமலைப்பேட்டை (திருப்பூர்) 6. கிளானிலை (புதுக்கோட்டை), தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), பொதுப்பணித்துறை மக்கினம்பட்டி (கோயம்புத்தூர்), தேவகோட்டை (சிவகங்கை), செந்துறை (அரியலூர்), ராஜபாளையம் (விருதுநகர்), திற்பரப்பு (கன்னியாகுமரி) தலா 5. சூலூர் (கோயம்புத்தூர்), சங்கரன்கோயில் (தென்காசி), பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி), ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர்) தலா 4, களியல் (கன்னியாகுமரி), தொழுதூர் (கடலூர்), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), சிறுகுடி (திருச்சிராப்பள்ளி), ஆழியார் (கோயம்புத்தூர்), சீர்காழி (மயிலாடுதுறை), மருங்காபுரி (திருச்சிராப்பள்ளி), திருச்செங்கோடு (நாமக்கல்). சாத்தூர் (விருதுநகர்), மூலைக்கரைப்பட்டி (திருநெல்வேலி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), செய்யார் (திருவண்ணாமலை). கழுகுமலை (தூத்துக்குடி), திருப்பூர் PWD (திருப்பூர்), பாம்பன் (ராமநாதபுரம்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்). ஆனைமலை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). TNAU CRI ஏத்தாப்பூர் (சேலம்), கோவில்பட்டி (தூத்துக்குடி), சிவகிரி (தென்காசி) தலா 3. புதுச்சத்திரம் (நாமக்கல்), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), வத்தலை அணைக்கட்டு (திருச்சிராப்பள்ளி), சோத்துப்பாறை (தேனி), கோயம்புத்தூர் விமான நிலையம் (கோயம்புத்தூர்). சங்கரி துர்க்கம் (சேலம்), திருச்சுழி (விருதுநகர்) நம்பியாறு அணை (திருநெல்வேலி), முதுகுளத்தூர் (ராமநாதபுரம்), எமரால்டு (நீலகிரி), பாளையம்கோட்டை (திருநெல்வேலி). சேத்துப்பட்டு (திருவண்ணாமலை). பொள்ளாச்சி (கோயம்புத்தூர்). தேவிமங்கலம் (திருச்சிராப்பள்ளி), வி.களத்தூர் (பெரம்பலூர்). தழுதலை (பெரம்பலூர்). கோவில்பட்டி AWS (தூத்துக்குடி). சிறுகமணி KVK AW5 (திருச்சிராப்பள்ளி), அவினாசி (திருப்பூர்), மங்களபுரம் (நாமக்கல்), திருப்பூர் தெற்கு (திருப்பூர்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), தொண்டி (ராமநாதபுரம்), புது வேட்டக்குடி (பெரம்பலூர்) தலா 2, சிவகாசி (விருதுநகர்). மீ மாத்தூர் (கடலூர்), PWD வாரப்பட்டி (கோயம்புத்தூர்), கெத்தை (நீலகிரி), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை). நாமக்கல் (நாமக்கல்), தம்மம்பட்டி (சேலம்), கே.எம்.கோயில் (கடலூர்), மடத்துக்குளம் (திருப்பூர்), திருவாரூர் (திருவாரூர்), சேத்தியாத்தோப்பு (கடலூர்), பெருங்களூர் (புதுக்கோட்டை). காஞ்சிபுரம் (காஞ்சிபுரம்), கோடியக்கரை (மயிலாடுதுறை). சிற்றாறு (கன்னியாகுமரி), செருமுள்ளி (நீலகிரி), கோயம்புத்தூர் தெற்கு (கோயம்புத்தூர்), வலங்கைமான் (திருவாரூர்), பெரம்பலூர் (பெரம்பலூர்), புலிவலம் (திருச்சிராப்பள்ளி), மணமேல்குடி (புதுக்கோட்டை), ஆர்.எஸ்.மங்கலம் (ராமநாதபுரம்), TNAU கோயம்புத்தூர் (கோயம்புத்தூர்), பெரியாறு (தேனி). காட்டுமயிலூர் (கடலூர்), வூட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), கின்னக்கோரை (நீலகிரி), அருப்புக்கோட்டை (விருதுநகர்), கடலாடி (ராமநாதபுரம்), இரணியல் (கன்னியாகுமரி), திருவாடானை (ராமநாதபுரம்). கோவில்பட்டி (திருச்சிராப்பள்ளி), பாலமோர் (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), லால்பேட்டை (கடலூர்). சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்). பில்லூர் அணை மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), காரியாப்பட்டி (விருதுநகர்), சண்முகாநதி (தேனி), லக்கூர் (கடலூர்), வீரகனூர் (சேலம்). சோலையார் (கோயம்புத்தூர்), சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), கேத்தி (நீலகிரி), திருச்சிராப்பள்ளி விமானநிலையம் (திருச்சிராப்பள்ளி), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 1.

அசிகபட்ச வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் இயல்பை விட சற்று குறைவாகவும் இருந்தது.
அதிகபட்ச வெப்பநிலை வேலூரில் 39.3 செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இதர தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 - 39" செல்சியஸ் பதிவாகியுள்ளது. தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 31'-36' செல்சியஸ் மற்றும் மலைப் பகுதிகளில் 20' -27" செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை சென்னை மீனம்பாக்கத்தில் 36.5° செல்சியஸ் (-1.9° செல்சியஸ்) மற்றும் நுங்கம்பாக்கத்தில் 36.0° செல்சியஸ் (-1.4° செல்சியஸ்) பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+