நெல்லை, தென்காசியை பிச்சு உதறும் பேய் மழை.. எப்போது நிற்கும்? தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக தொடர்மழை இரவும் பகலுமாக தொடர்ந்து பெய்து வருகிறது. இன்று காலையில் மழை சற்று குறைந்தது போல் இருந்தாலும், லேசான மழையாக தொடர்ந்து தற்போதும் பெய்து வருகிறது. இதனால் மழை எப்போது நிற்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று மாலை அல்லது இரவு இந்த மழை நின்றுவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் 2 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவுக்கு இரண்டு நாட்களும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று முன் தினம் அதிகாலையில் பெய்ய தொடங்கிய மழை இடைவிடாமல் 2 நாட்களை கடந்து தற்போதும் பெய்து வருகிறது.

rain school leave

தொடர்ந்து லேசானது முதல் மிதமான மழையும் இடையிடையே கனமழையும் என 2 நாட்களாக இரவும், பகலுமாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் எல்லாம் மழை நீர் தேங்கியது. பாபநாசம், விகேபுரம், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கடையம், பொட்டல்புதூர் போன்ற பகுஹ்டிகளில் கனமழை பெய்தது. இதேபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வருவதால் அணைகளில் நீர்மட்டம் கடகடவென நிரம்பியது. மணிமுத்தாறு, பாபநாசம், ராமநதி, கடனாநதிகளில் நீர்மட்டம் கடகடவென உயர்ந்தது.

ராமநதி மற்றும் கடனாநதி முழு கொள்ளளவை எட்டிய நிலையில் இரண்டு அணைகளில் இருந்தும் விநாடிக்கு 22,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்த ஆற்றின் கரையோர பகுதிகளில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குற்றால அருவிகளிலும் இதுவரை இல்லாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

2 நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மழை எப்போது நிற்கும் என்று மக்கள் எதிர்ப்பார்த்து உள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஒருசில இடங்களில் குளங்கள் உடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மழை நின்றால் தான் வெள்ளம் வடியும் என்பதால் மழை எப்போது நிற்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், இன்று மாலை அல்லது இரவுக்குள் தென்காசி மாவட்டத்தில் மழை நின்று விடும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- "நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. தென்காசியில் இப்போது பெய்த இந்த மழையே இதுவரை பெய்யாத வரலாற்று மழையாக இருக்கும். 2 நாட்களாக பெய்த மழை இன்று மாலை அல்லது இரவோடு முடிந்துவிடும். அதற்கு பின் மழை இருக்காது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

13 ஆம் தேதி காலை 8.30 மணியளவில் இருந்து, இன்று காலை 8.30 மணி வரையிலான நேரப்படி தென்காசி மாவட்டம் கடனா நதி பகுதியில் 26 செமீ மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் ஊத்து மற்றும் நாலுமுக்கு 23.5 மற்றும் 22 செமீ மழை பதிவாகியுள்ளது. மாஞ்சோளை 19.5 செமீ, ராமநதி அணை பகுதி 15.4 செமீ, கோடியக்கரை 15.2, பாபநாசத்தில் 14.9 செமீ மழை பதிவாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+